பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#74 அகத்திணைக் கொள்கைகள் பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய் யாதொன்றும் வாய்வாளாது இறந்து ஈவாய் கேள்." (பேது - மயக்கம் எவ்வம் - வருத்தம், வாய் வாளாது - சொல்லாது. இறந்து ஈவாய் - கழிந்து போகின்றவளே.) என்கின்றான். ஓரளவு உண்மையை உணர்ந்து தன் காதலரும் பைக் கிள்ளிக் கொள்ளுகின்றான். இங்ஙனம் இவன் மயங்கி மதி இழந்தமைக்கு ஒரே காரணம், தான் கண்ணுற்ற பெண் குமரி போலும் தோற்றம் அளித்தமையே. இம்மயக்கத் தோற்றத்தின் அடிப்படையில் கைக்கிளை காதல் முகிழ்க்கின்றது. ஆகவே, அகத் திணைக் கைக்கிளை என்பது காமப் பருவத்தை இன்னும் எய்தாத, ஆனால் அணிமையில் எய்தும் நிலையில் இருக்கும், பெதும்பைப் பருவப் பெண்ணைத் தோற்றத்தால் குமரி என மயங்கிப் பருவம் எய்திய இளைஞன் அறியாமல் தன்னுள் புலப்படுத்திய காதவின் முகிழ்ப்பை மட்டிலும் கூறி அமைவதாகும். இந்த அளவில் இத் திணையின் காமப் பொருள் முடிவு பெறுகின்றது. இங்ங்ணம் பருவ மயக்கத்தால் அறிவு மயக்கம் ஏற்பட்ட கைக்கிளை இளைஞர்கட்கு மன மாசு கற்பித்தலும் அறப்பிழை ஏற்றலும் எத்துணையயும் பொருந்தாது. தோற்றத்தால் ஒன்றனைப் பிறிதொன்றாகக் கருதிய கைகக்கிளை இளைஞன் குற்றமுடையவன் அல்லன்; மாசுடைய மன்த்தவனும் அல்லன். தான் தவறாகக் காதலித்த நங்கை குமரியல்லள் என்று உணர்ந்த பின் தன் செயலை எண்ணித் தானே நகைத்துக் கொள்ளு கின்றான். தான் காதலித்த நங்கையும் குற்றமிலள், தானும் குற்றமிலன் என்று உணர்கின்றான். இவன் நிலையைக் கபிலர் பெருமான், நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட துமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது சொல்லற்க என்னா இறையே தவறுடை யான்." (புறங்கடை - வெளியே போதர- சொல்ல; துமர் - உன் சுற்றத்தார்; இறை - அரசன்) 8. കേു. - 56,