பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைக்கிள்ை £75 என்ற கலிப்பாட்டுப் பகுதியில் புலப்படுத்துவர். 'வெளியே வந்த ஆன்மேலும் பிழை இல்லை; வெளியே செல்ல விடுத்த உன் இபற்றோர்டாலும் பிழை இல்லை. போர் யானை குளத்திற்கு நீர் குடிக்க வந்தால் அதன் வருகையைப் பறை அறைந்து அறி விப்பது அரச வழக்கம். அது போலவே உன் வருகையையும் அரசன் அறிவிருத்திருக்க வேண்டும். அங்ங்ணம் செய்யாமையின் அவனே தவறுடையான்' என்று கைக்கிளை இளைஞன் எவர் பாலும் தவறு இல்லை என்ற பொருள் விளங்கப் பேசுகின்றான். குமரி இல்லை என்றும், தன் காதலுக்குப் பொருளற்றவள் என்றும் சோழன் நல்லுத்திரன் கூறியாங்கு, வருந்தநோய் செய்திறப்பின் அல்லால் மருந்தல்லள்' என்றும் அறிந்து கொண்ட பின்னர் அவன் பேசும் பேச்சினைச் சொல்லி இன்புறல்’ என்று கூறுவர் தொல்காப்பியர். எண்ணிய மெய்யின்பம் பெறவில்லையே என்று அவ்விளைஞன் மனம் வருந்தான் என்பதும், கைக்கிளைச் செயல் அவன் சொல்லளவில் நின்றொழிவது என்பதும் பெறப்படும் . இவன் பலவாறு புனைந்தும் வருந்தியும் இன்புற்றும் பார்த்தும் கறுபவை யெல்லாம் இவன் செவியளவினவே, கண்ணளவினவே. இவன் காதல் கொண்ட நங்கை இதனைச் சிறிதும் அறியாள்: எண்ணவும் செய்யாள். இவ்வமைப்பு நிலையைக் கருத்தில்கொண்டு கைக்கிளைப் பாடல்களைக்" கற்றுத் தெளிய வேண்டும். . கைக்கிளை என்னும் குறியீடுஇருபாலார்க்கும் கொள்ளத்தக்க பொதுநிலையிற்றான் அமைந்துள்ளது என்பது தெளிவு. என்ற போதிலும் ஆண்பாற் படுத்திக் கூறுவதே, இளைஞனின் காதலை எடுத்துக் கூறுவதே, இலக்கண மரபாகும் என்பது நாவர்ை சோம சுந்தர பாரதியாரின் கருத்தாகும்.' சொல்லெதிர் பெறாஅன்’ என்ற தொல்காப்பியரின் வாக்கும் இதனை வலியுறுத்தல் அறியப் படும். தமிழ்ச் சமுதாயத்தில் இளங் குமரியர் தம் காதலை முந்துற்றுக் காட்டும் மரபு இல்லை. தமிழ்ச் சமுதாயத்தில் நல்லன. வற்றையும் தீயனவற்றையும் கண்ட தமிழ்ச் சான்றோர்கள் தீயன வற்றை அறவே விலக்கினர்; நல்லனவற்றைத் தேர்ந்து, தெளிந்து , இலக்கியப்படுத்தி இலக்கணமும் வகுத்தனர். சமுதாயத்தில் இல்லாத ஒழுகலாற்றை அன்னோர் யாண்டும் கூறினார் இலர். இன்னொரு முக்கிய செய்தியும் ஈண்டு நினைக்கத் தக்கது. பொது 9. டிை - 109 10 டிெ - 56, 57, 58, 109 . 11. அகத்திணை-பாரதியாரின் உரை. பக் 185