பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


党警备 அகத்திணைக் கொள்கைகள் வாக நங்கையைக் காட்டிலும் நம்பி சில ஆண்டுகள் மிக்கவனாக இருத்தல் வேண்டும் என்பது தமிழர் கண்ட மணமுறை. மிக்கோ னாயினும் கடிவரை யின்றே." என்றுவிதியும் செய்வர் தொல்காப்பியர்.குமரனாயினும் தம்மினும் இளையவனை மணக்கும் வழக்கம் தமிழ்ப்பெண்களிடம் என்றும் இருந்ததில்லை சில ஆண்டுகள் தம்மிலும் உயர்ந்தவனையே மனக்க விரும்புவது அன்னவர் இயல்பாகும். இத்தகைய மரபு பிழையாது தமிழ்ச்சமுதாயம் மகளிரை வளர்த்து வந்தது; இன்றும் அம்மரபு நின்று நிலவுவதைக் காணலாம். ஆதலின் பருவம் வந்த நங்கையர் பருவம் எய்தாத நம்பியைக் காமுறுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் காணாத வழக்கு. தமிழ்ப்பெண்டிர் கற்பைப் போலவே தானத்தையும் காப்பவர்கள். கற்புக்காக நாணத்தைக் கைவிடுவரேயின்றிக் காதலுக்காக நாணத்தை இழக்க விழை யாதவர்கள். இந்நிலையினின்றும் வழுவினரேல் சமூகப் பழி வந்தெய்தும் வாழ்வும் இழிந்து கெட்டுவிடும். பிறிதொரு செய்தியும் ஈண்டுச்சிந்திக்கத்தக்கது. மகன்மை எய் தாதவனாயினும் எய்தினவனாயினும் ஒரு நங்கை தன் காமவுணர் வைத் தானே முந்துற்றுக் கிளத்தல் இல்லை. . - தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை. ’ என்பது ெ தால்காப்பியம். இங்ஙனம் செய்வதை அவளது நாணமே தடுத்து நிறுத்தும். - . தாமுறு காமத் தன்மை - தாங்களே யுரைப்ப தென்பது ஆமெனல் ஆவ தன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா " என்று கம்ப நாடனும் தமிழ்ப் பெண்ணிர்மையைச் சூர்ப்பனகை வாய்மொழியாக எடுத்துரைப்பன். ஆகவே, அகத்தினைக் கைக் கிளையில் பெண்பாற்கு இடமே இல்லை என்பது இதனாலும் - வலியுறும், இங்ஙனம் இடம் இல்லாதது தமிழ் நாகரிகத்தின் இயல் பும் பெருமையும் ஆகும் ஆண் தன் காதலைத் தானே முந்துற்று. 12. களவியல்-2 13. டிெ-28 14. கம்பரா.ஆரணிய-சூர்ப்ப .