பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கைக்கிளை 281 காமம் நிற்கும் காலம்சிறிதாதலின், யாதொருமெய்ப்பாடும் இவன்கண் தோன்றுதல் இல்லை. ஏனைக்கைக்கிளையினர் காமம் காழ்ப்பு பெற்றவர்கள்; பிரிவுக் கவலை உறுபவர்கள்; இவனிடத்துப் புறத்தே புலனாகும் .ெ ம ய் ப் பா டு க ளு ம் தோன்றும். நக்கண்ணையார் தான் பசலை நிறம் அடைந்ததைத் தெரிவித்தல் காண்க.”* பருவம் எய்தின இருபாலாரிடை நிகழும் அறிந்த கைக் கிளைக்கும் பருவம் வாய்ந்த ஆண்மகனிடம் மட்டிலும் நிகழும் அறியாக் கைக்கிளைக்கும் உள்ளத்தில், உடலில், செயலில், காமத்தில், விளைவில் பெரும் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் உள்ளன. அகத்திணைக் கைக்கிளை ஆடவன் தன் அறியாமையை உணர்ந்து திருந்துகின்றான்; தூய்மையையும் காக்கின்றான்: ஐந்திணை வாய்ப்பையும் பெறுகின்றான். இங்குக் கைக்கிளை உள்ளத்தளவு சிறிவ காலம் நிகழினும், துறை விரிவு இலை யெனினும், உரனும் பெருமையும் உடையதாதலின் திணை என்றி பெரும் பெயர்க்கு உரித்தாயிற்று எழுதினையுள் ஒன்றாக, ஒரு பிரிவாகக் கருதப் பெறும் நிலையையும் அடைந்தது. ஏனைய கைக் கிளைகளோ புறத்திணையில் அடங்குவன வாயின; துறையளவில் நின்றன. 23. புறம்-84