பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 - அகத்திணைக் கொள்கைகள் கருப்பொருள் : முதற்பொருளிலிருந்து தோன்றுவது கருப் பொருள். அஃது இடத்திலும் காலத்திலும் தோன்றும். அது தெய்வம், உணவு, விலங்குகள், பறவைகள், பறை, தொழில், பண், பூ, நீர் போன்றது. இதற்குத் தொல்காப்பியர், தெய்வம், உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப.”* என்று விதி செய்து காட்டுவர். இப் பொருள்கள் வெவ்வேறு விதமாக இருக்கும். மலை நாட்டில் இருக்கும் பொருள்கள் வேறு; சமவெளிகளில் காணும் பொருள்கள் வேறு. மலைப்பகுதியில் கானும் விலங்குகளையும் பறவைகளையும் சாதாரணமாகக் கடலையொட்டிய பகுதிகளில் காண்பது அரிது. அப்பகுதியிலுள்ள மக்கள் அவற்றை வீட்டில் வைத்து வளர்க்கலாமேயன்றி இயற்கையில் அங்குக் காணப்பெறா. ஒவ்வொரு பகுதியிலும் கடவுள் வழிபாடு மாறுபட்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். GTGfGE GEO-55 césof-th (Sophisticated people) g)lb மாறுபாடுகள் அதிகம் காணப்பெரு விடினும் சாதாரண மக்களி டையே இன்றும் இவ்வேற்றுமையை நன்குக் காணலாம். உரிப் பொருள் : உரிப்பொருளாவது மக்கட்கு உரிய பொருள். உரிப்பொருள் மக்கள் வாழ்க்கையை யொட்டி இருக்கும்; அவர்கள் வாழும் வாழ்க்கை நெறியே-ஒழுக்கமே-உரிப் பொருள் என்று கூறினும் தவறாகாது. உரிப்பொருளைத் தமிழர்கள் ஐந்து பகுதியாகப் பிரித்துக் காட்டுவர். ஐந்து திணைக்கும் தனித்தனி யாக ஐந்துவகை ஒழுக்கத்தை வரையறை செய்துள்ளனர். திணை என்ற சொல்லுக்கே ஒழுக்கம் என்ற பொருள் உண்டு. ஐந்துவகை யொழுக்கத்தை ஆசிரியர் தொல்காப்பியர், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேறுங் காலைத் திணைக்குரிப் பொருளே.' என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். புணர்தல் தலைமகனும் தலை மகளும் இணைந்து வாழ்தல். இருத்தல் என்பது பிரிவுற்ற தலை மகன் வருந்துணையும் தலைவி தலைவன் வந்து விடுவான் என்று ஆற்றியிருத்தல்; அதாவது நம்பிக்கையுடன் பொறுத் 11. -20 - | స్టోణాల