பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேருந்தினை 287 எழுதியவரே பின்னர் முரண்படுகின்றார். குற்றேவல் செய்வார். புறப்பொருட்கு உரியராயினார் என்க. எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம்’ என இருவகையாயின' என்று கூறி நகைப்புக்கிடனாகின்றார். இங்ஙனம் இடைக்காலத்தில் முரணான கருத்து மரபாகிய காரணத்தால் ஐந்திணையை அகம் எனவும் கைக்கிளை பெருந்திணைகளை அகப்புறம்' எனவும் பின்வந்தோர் பிழையான இலக்கண வழக்காற்றை ஏற்படுத்திவிட்டனர். இடைக் காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் சமயங்களும் சாதிகளும் பல கோட்பாடுகளைப் பரப்பியதால் அதே பார்வையைத் தொல் காப்பியம் சங்க இலக்கியம் போன்ற தொன்னூல்களிலும் செலுத்திப் பிழைபட்டனர். இதன் முடிவு பண்டைய எளிய கருத்துகள் அரியனவாயின; தெளிந்த கருத்துகளும் கலங்கிய நிலையை எய்தின. பெருந்திணை-ஐந்திணை ஒப்புநோக்கு: தொல்காப்பியத்தி லும் சங்க இலக்கியங்களிலும் வரும் இந்த இரண்டு திணைபற்றிய கருத்துகளை ஒப்பிட்டு ஆராயின் ஐந்திணையின் ஒரு மிகு நிலையே பெருந்திணையாக வளர்கின்றது என்ற உண்மையினை அறியலாம். பெருந்திணையைப்பற்றி இதுகாறும் கொண்டிருந்த கருத்துகள் தவறானவை என்பதனையும் அறியலாம். - (1). பெருந்திணைக்கண் வலிந்த காமத்துக்கு இடம் இல்லை; உள்ளப் புணர்ச்சி என்னும் அகத்திணைப் பண்பிற்கு ஒத்ததுவே இது. தொல்காப்பியரும் சங்கச் சான்றோர்களும் இத்திணையை அன்புக் காமமாகவே எண்ணிப் பாடியுளனர். என்பது சிந்தித்துக் காண்டார் அறியலாகும் ஒர் உண்மையாகும். அகத்திணையின் ஒரு பெரும் பிரிவான ஐந்திணையைப்போல் விரிந்து செல்ல வாய்ப்பு இல்லாதது; மிகச் சிறிய துறைகளையே கொண்டது. பெருந்தினைக் குறிப்பே' என்பதனால் விரிவுக்கு இடமின்மை யையும், செப்பிய நான்கும்' என்பதனால் துறைகள் விழய இடமின்மையையும் ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுவதை நோக்குக. பெந்ருதினைத் துறைகள் நான்கும் ஐந்திணைக்குமுற்றிலும் வேறு பட்டவை அல்ல; ஐந்திணையின் சில துறைகளே இங்கினம் வடிவு கொண்டுள்ளன. ஏறிய மடற்றிறம் எனப் பெருந்திணை நூற்பா தொடங்குவதே, ஒரு பெரிய சான்றாக அமைகின்றது; 4. அகத்திணை-54 5. டிெ-54