பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - . அகத்திணைக் கொள்கைகள் தால், எந்நங்கையையும் மடலேறிப் பெறச் சில காமுகர்கள் முனைவர். ஒருவனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்துக் கொள் ளும் உரிமை பெண்ணினத்திற்கு உண்டு. ஆதலின் தன்மாட்டு விருப்பமில்லாத நங்கையை வணக்கிப் பெற எந்த நம்பியும் மட துரான் மடலேற்றம் ஒத்த காமம் உடையார்மாட்டே நிகழும் வேறு இரண்டு கலிப்பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளையும் காண்போம் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் ஒருவன் தலைவியைக் காண முடியாத நிலையையும் அதனால் கிளன்றெழுந்த காமப் பசியையும் பொறுக்க முடியாத தலைவன் அவளைப் பெறுதல் எப்படி என்று புலம்புகின்றான்". அவள் தன்னை மகிழ்வித்த செயலை நினைந்து அசைபோடுகின்றான்.' தம் மகள் செய்கையை ஐயுற்ற பெற்றோர்கள் அவளை முற்றும் வெளியே செல்லாதவாறு இச்செறிப்பு செய்ததனால் இருவரிடை யேயும் சந்திப்பு நிகழ வாய்ப்பு இல்லை; இதனால் பிற கூட்டங் கள் நிகழ வாய்ப்பே இல்லாது போயிற்று. இதனால் கவற்சி பெருகிய காதலன் மடலேறத் துணிகின்றான். மடலேறுதல் பற்றி நுவலும் நான்கு கலிப்பாடல்களையும் ஆராயின் தன் காதலுக்குக் குறுக்கே தடையாக நிற்கும் பெற்றோர்களை வணக்குவதற்கே தலைவன் தன் நெஞ்சம் கவர்ந்தாளை ஊரறிய வெளிப்படுத்துவான் என்பதைத் தெளியலாம். மடலேற்றம் கண்ட ஊர்ப் பெருமக்கள் மகள் இசையுங்கால் பெற்றோர்கள் குறுக்கிடல் பொருந்தாது என்றும், இவன் காதலை இனியும் சோதித்தல் கூடாது என்றும் தம் கருத்துரைப்பர். இவன் காதலிக்கும் நங்கையும் இவனைக் காதலித்தலால் இது அன்பு டைக் காமம் என்று சான்றோரும் நெறி பகர்வர். தம் மகளும் ஊராரும் சான்றோரும் ஒப்புதலைத் தெரிவிக்கும் சூழ்நிலையில் விடாக் காதலனாக இருக்கும் தலைவனுக்குத் தம் மகளைப் பெற்றோர் மணம் முடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இத்தகைய நிகழ்ச்சியொன்றினைக் கலியில் காணலாம். வருந்தமா ஊர்ந்து மறுகின்கட் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர்.' 10. டிெ.138 !!. കൂ,-139 141-لندن .2