பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பேருந்திணை 291 (வருந்த-பார்ப்பவர் இரங்க; மா-குதிரை; மறுகு-தெரு: திருந்திழை-நங்கை; கிளவி-சொல்; பொருந்தாதார். பகைவர்; வழுதி- பாண்டியன்; தமர் உறவினர்) என்ற கலிப்பாப் பகுதி பெருந்திணைத் தன்மையைக் கசடற விளக்கும். தலைவன் மடலேறுதலைக் கண்டவர்க்கு அவன் பால் இரக்கம் தோன்றியது. தலைவன் தெருவில் பாடிய காதல் பாட்டால் அவன் காதலிக்கும் பெண் யார் எனத் தெரிந்தது. பெற்றோர் தம் மகளின் உண்மைக் காதலனை அறிந்தனர். பாண்டியனுக்கு அஞ்சிப் பகைவர்கள் திறைப் பொருள் கொடுப்பது போலப் பெற்றோரும் தம் மகளை மடலேறிய நம்பிக்கு மணஞ் செய்து கொடுத்தனர். 'வருந்த என்பதனால் ஊராரின் இரக்கம் தோன்றுதலையும், திருந்திழைக்கு ஒத்த கிளவி என்பதனால், மகளும் இவனைக் காதலிக்கின்றாள் என்பதையும், பொருந் தாதார்’ என்பதால் பெற்றோர்க்கு மனம் ஒப்பவில்லை என்பதை யும் அறிகின்றோம். அரசன் குடிமக்களின் நலங்கருதித் தன்மானம் பாராது திறை கொடுத்தேனும் அமைதியை நிலை நாட்டுவது போல’’, பெற்றோர்களும் தம் மகள் நலம் நோக்கித் தம் குடி கானம் கருதாது, அவள் உள்ளங் கவர்ந்த நம்பிக்கு அவளை மணங் கூட்டுவர். மணம் செய்ய வேண்டுவதே அறமாகும். ஆண் பெண் இருவர் உள்ளமும் ஒத்திருத்தலே-உள்ளப் புணர்ச்சியே - அகத்திணையாகும். பெற்றோர் முதலிய பிறர் உள்ளங்கள் எல்லாம் இவ்விருவர் உள்ளத்திற்கு இணங்கியே யாதல் வேண்டும் என்பதுவே அகநெறியாகும். அன்புறு கிளவி யான் ஒண்டொடி நோய் நோக்கு" என்ற தொடர்களால் நங்கை நம்பியின் காதலுக்கு இசைந்தாள் என்பதும், என் நெஞ் சாறு கொண்டாள்', 'என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல் ஒருத்தி' என்ற தொடர்களால் நம்பி அவள்மேல் காதல் கொண்டமையும் தெளிவு. நம்பியும் நங்கையும் அன்புடைக் காதலர்கள்; இயற்கைப் புணர்ச்சிக்குமேல் கூட்டங்கள் நிகழ்த்த முடியாத நிலையிலுள்ள ஐந்திணைக் காதலர்கள். தலைவன் மடலேறி இடையூற்றினைத் தவிர்த்து, இற்செறிக்கப்பட்ட தலைவியைத் தன் பெரு முயற்சியால் இல்லக் கிழத்தியாக்கிக் 13. குறள்-680, 14. கலி.138. 15. டிெ-140 16. டிெ-139 17. டிெ-140