பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்திணை 297 வாரா தமையலோ இலரே; நேரார் நாடுபடு நன்கலம் தரீஇயர் நீடினர் தோழிநங் காத லோரே' (புதல்-புதர், கவின்-அழகு தொடரி-தொடுத்து தகை அழகு, தரீஇயர்-வழங்கும்பொருட்டு, நேரார்-பகைவர்; நண்கலம்-அணிகள்: நீடினர்-காலம் தாழ்த்தினர்! இதில் தலைவன் குறித்துச் சென்ற காலம் வந்தும் தலைவன் வாராது காலந்தாழ்த்துகிறான். ஆற்றியிரு’ என்று தலைவியிடம் சொல்லத் துணிவில்லாத தோழி நீடினர்' என்பதனை ஒப்புக் கொண்டு ஒன்னாரிடம்திறைவாங்குவதால் காலம்தாழ்த்தது போலும் எனக் காரணம் காட்டுகின்றாள். இளமைதீர் திறத்திற்கு இப்பாடல் நல்லதோர் எடுத்துக் காட்டு. என் உள்ளம் அவர்பாற் சென்ற மையால் என் உடம்பு காமத்தால் மெலிந்து ஏங்கி வறிதாயிற்று. இனி அவர் வரினும் என் நோய்க்கு மருந்தாகார். ஆதலின் அவர் சென்ற இடத்திலேயே இருப்பாராக என்று நற்றிணைத் தலைவி யொருத்தி பெருந்திணை மொழிகின்றாள்.’’ தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கும் அகநானூற்றுத் தலைவியின் தலை வனைப் பிரிந்து வாழும் வாழ்க்கை நம் தீவினையின் பயன் போலும் என்ற கூற்றிலும் பெருந்திணைக் குறிப்பினைக் காண @rü.°° இல்லற வாழ்க்கையில் இன்ப துகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாமல் இளமையை உரிமையுடன் வேண்டும் அளவு நுகராமல் பொருள் முதலியவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர் திறம் பெருந்திணையாயிற்று எனவும், காதலர்களின் உள்ளன்பிற்குக் குறையும் களங்கமும் இல்லையாதலின் அகத்தினை யாயிற்று எனவும் அறிதற்பாலது. (இ) தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதி ம்: தலைவனின் பிரிவு ஐந்திணை தலைவிக்குத் துன்பத்தை விளைவிக்கின்றது. புல்வெளிக்கு மேயச்சென்று மன்று புகுதரும் ஆநிரைகளின் மணி யேர்சையும், மாலைக்காலப் பிறச் சூழ்நிலைகளும், பறவையின் புணர்ச்சியும், விலங்கின் தழுவலும் அவள் அடக்கத்தை கிளறச் செய்யும். வருவான், வருவான்’ என்ற நம்பிக்கையுடன் தன் காம 28. ஐங். - 463 29. நற்-64 30. அகம்-243