பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல்-8 அகத்தினைப் பாகுபாடு அகத்திணையைத்தொல்காப்பியம்கைக்கிளை, குறிஞ்சி,முல்லை மருதம், நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழு திணைகளாகப் பகுத்துப் பேசும். இவற்றுள் குறிஞ்சி முதல் பாலை ஈறாகவுள்ள ஐந்து திணைகளும் ஐந்திணை என்று ஒரு தொகுதியாக வழங்கப் பெறும். இங்ஙனம் ஏழு பிரிவுகளாகப் பிரித்தமைக்கு அடிநிலைக் காரணம் இன்னதெனக் காண்டோம். - - (1) கைக்கிளையை ஒருதலைக் காமம் என்றும், ஐந்திைைணய ஒத்த காமம் என்றும், பெருந்திணையை ஒவ்வாக்காமம் என்றும் உரையாசிரியர்கள் கூறுவர். இங்ஙனம் இப்பிரிவுகட்கு காமத் தன்மையை அடிப்படையாகக் கொள்ளின், ஐந்திணையை ஒரே பிரிவாகக் கொண்டு அகத்திணைப் பிரிவுகள் மூன்றெனல் பொருந்துமே யன்றி ஏழெனக் கூறுதல் பொருந்தாது. மேலும், கைக்கிளை பெருந்திணை என்னும் பெயர்க் குறியீடுகள் தம் காமத் தன்மையைச் சுட்டும் 'கை', 'பெரு என்னும் அடைகளைப் பெற். துள்ளன. இவற்றையொட்டி ஐந்திணை அன்புத்திணை என்று சுட்டப்பெறுவதன்றோ முறை? அங்ங்ணமின்றி ஐந்திணை என்று எண்ணடை கொண்டு திகழ்வதால் அகப்பிரிவுகட்குக் காமத் தன்மையை அடிப்படையாகக் கொள்ளல் பொருந்தாது என்பது பெறப்படும். - (2) தமிழ் அகத்திணை நுவலும் பல்வேறு காதற் கூறுகள் தமிழகத்தின் பல்வேறு நிலக் கூறுகளின் அடிப்படையாக எழுந் தவை என்ற ஒரு கோட்பாட்டினை எழுப்புவர் திரு எஸ். கே. பிள்ளையவர்கள். நம் தமிழகத்தில் பாலை என்று சுட்டிக் காட்டத் தக்க நிலப்பிரிவு இல்லை என்பதை தொல்காப்பியமே 1. The Ancient Tamils-Part I Liš, 43.