பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/321

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பேருந்திணை - 303 - யாக முடிந்தது. தலைவனும் தலைவியும் உள்ளம் ஒத்த இல்லறத்தாராதலின் அவர்கள் ஒழுக்கம் அகத்திணை யில் அடங்கியது. மனைவியின் காம நாடியைக் கண்டு கணவன் ஒழுக வேண்டும் என்பது இத்துறையின் அறிவுரையாகும். (ஈ) மிக்க காமத்து மிடல் : காம மிகுதியானே எதிர்ப் பட்டுழி வலிதிற் புணர்ந்த இன்பம் என்று நச்சினார்க்கினியரும் 'கரை கடந்த காமத்தால் விரும்பாதாரை வலிதிற் புணரும் வன்கண்மை’ என நாவலர் பாரதியாரும் இத்தொடரை விளக்குவர் பிறர் பலரும் இதுகாறும் எழுதியுள்ள கருத்தும் இது போன்றதே. இக்கருத்து தவறுடையது என்பதை டாக்டர் வ. சுப மாணிக்கனார் மிக அருமையாகத் தடைவிடைகளுடன் விளக்கிப் போவர். இவர் கருத்து அறிவுக்கும் வழி வழிவரும் அகத்திணை மரபுக்கும் நன்கு பொருந்துகின்றது. அதனை ஈண்டுக் காண்டாம். ‘மிக்க காமத்துமிடல் என்ற தொடர் கட்டாயப்படுத்திப் புணர்தல் என்று பொருள் கொள்ளல் சிறிதும் பொருந்தாது. "மிடல் என்ற சொல்லுக்கு இப்பொருள் உண்டு என்று பலர் கருதலாம். ஆனால் ஒரு தொடரின் பொருள் காணவேண்டுமாயின் பொதுக் கருத்து, முன்னும் பின்னும் வரும் கருத்துத் தொடர்ச்சி, சொல்லின் இயல்பான பொருள் என்ற அடிப்படையில்தான் நோக்கிக் காணல் வேண்டும். ஏறிய மடற்றிறம் எனத் தொடங்கும் நூற்பா அகத்திணையியலில் அமைந்துள்ளது. தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் என்ற தொடரின் பொருள் தெளிவானது தலைவனது பிரிவால் தலைவி படும் ஆராத்துயரை அத்தொடர் குறிக்கின்றது. மிடல்' என்ற சொல்லுக்கு வலி, பேராற்றல், துணிவு என்பதே இயல்பான பொருளாகும். 'உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து’** ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப' - 'அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்' என்ற பாவடிகளில் வரும் சொல் இப்பொருளில் வந்துள்ளமை காண்க. வலியினாற் செய்தல் என்பது வேறு வலிந்து செய்தல் வேறு. மிக்க காமத்து அடல் என்றிருப்பின், பிறரை வருத்தி வம்பு செய்தல் என்று பொருள்படும். பெருந்திணை அகத்திணை ஏழினுள் 44. பதிற்-13. 45. டிெ-57. 46. கலி-2.