பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தினை 305 தலைவி : (தன்னுள்) வெளவிக் கொள்ளுதல் அறமாம். இவனும் நம் சொல்லைக் கேளாது வருத்துகின்றான். முற்பிறப்பில் இருவரும் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றோம். இனி இவன் கருத்திற்கு இசைய வேண்டியதுதான். இங்ஙனம் இவர்கள் உரையாடல் புணர்ச்சியாக முடிவதைக் காண்கின்றோம். இந்த நிகழ்ச்சி கூடலை மிகுவிப்பதற்கு மேற் கொண்ட ஊடல் பேச்சேயன்றி, இக்காதலர்கள் அன்பற்றவர்கள், உள்ளம் ஒன்றாதவர்கள் என்பது ஆகாது. உள்ளம் ஒன்றாதவர்கள் இவ்வண்ணம் நெடிது உரையாடிக் கொண்டிரார். கபிலர் பெருமான் ஊடலில் காதலர்கள் உறழ்ந்து உரையாடும் ஒரு வகையைக் காட்டுகின்றார். ஈண்டுப் புலவி துணுக்கம் என்ற திருக்குறள் அதிகாரத்தை ஒப்பு நோக்கி எண்ணத்தக்கது. ஊட லுவகையில் வரும் காதல் மொழிகளை உணர்ச்சி நீக்கிப் பொருள் காண்டல் வேண்டும். வெளவி என்ற சொல்லுக்கு வலிந்து’ என்பது அகராதியில் உள்ள பொருள் என்ற போதிலும், அச்சொல் அகப்பாடலில் வருதலாலும், புணர்ச்சிக்கு முன்னர்க் காதலன் வாயினின்றும் வெளிப்படுதலானும், இடத்திற்கேற்பப் பொருள் கண்டு உரைத்தல் வேண்டும். மையில் மதியின் விளங்கு முகத்தாரை வெளவிக் கொளலும் அறனெனக் கண்டன்று' என்ற அடிகளை ஊன்றி நோக்கினால் உண்மைப்பொருள் தெளி வாகும். மலரிலும் மெல்லிது காமம்' என்பது வள்ளுவமா தலின் அன்புடைய காதற் பெண்களிடம் இனிது உரையாடல் வேண்டும்; நலம் பாராட்டி மெல்லிய உணர்வூட்டுதல் வேண்டும்: அதன் பின்னர் தழுவுதல் வேண்டும். இதுவே ஆண் மேற்கொள்ள வேண்டிய முறை. காமம் மிக்க காதலன் திடீரெனத் தழுவிக் கூடலும் உண்டு. இதனைத்தான் கபிலர் குறிப்பிடுவது. இது புணர்ச்சி முறைக்கு ஒவ்வாது எனினும் தலைவன் அன்பனாதலின் அறத்திற்குப் புறம்பாகாது; மாறாகாது. - கபிலர் புனைந்த இக் கலிப்பாடலில் வரும் மாந்தர்கள் ஏவல் செய்யும் அடியவர்களாதலின் இச்செயல் பெருந்திணையின் 48. கவி-62 49. குறள் - 1289 அ-20