பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 அகத்திணைக் கொள்கைகள் பாற்படும் என்று நச்சினார்க்கினியரும் பிறரும், கொள்வர். சாதி வேறுபாடும் தொழில் வேறுபாடும் இவர் கொள்கைக் கோட் பாட்டின் முக்கிய கூறாகலின் பணியாளர்க்குத் தலைமையும் ஐந்திணையும் இல்லை என்று இவர்கள் கொண்டனர். இப்பிழை யான கருத்தினால் தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத் திற்கும் இவர்கள் காணும் உரைகளினால் அடிப்படை உண்மைகள் வழுவாகத் தோன்றுகின்றன. இப்பாடலின், வேறல்லம் என்பதொன்று உண்டால் அவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு. என்ற அடிகளால் தலைவியும் மனம் ஒன்றிக் காதலிக்கின்றாள் என்பது தெளிவாகின்றது. உள்ளம் ஒத்த அன்பும் உடல் ஒத்த புணர்ச்சியும் இப்பாடலில் நுவலப்படுதலின் இதில் வரும் தலை மக்கள் ஐந்திணைக்கு உரியவர்கள் என்பது சொல்லாமலே போதரும். ‘மிக்க காமத்து மிடல்' என்பதன் பொருள் ஆண் வலிந்து மேற் கொள்ளும் புணர்ச்சியன்று; ஐந்திணைத் தலைவி காமம் மிக்குச் செய்யும் துணிவுச் செயலாகும் என்பது அறியத்தக்கது. இப் பெருந்திணைத் துறைக்குச் சங்கப்பனுவல்களில் எடுத்துக்காட்டுகள் மிகுதியாக உண்டு என்று தோன்றவில்லை. எனினும், பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளினின்றும் இச்செயலை ஊகித்து அறிந்து கொள்ளலாம். சில காமக் கருத்துகள் எண்ணத்தளவிலும் சொல் லளவிலும் அடங்கி நிற்குங்கால், நாணஎல்லை கடவாத நிலையில் அமையுங்கால், அவை ஐந்தினையாகும் என்பது ஏற்கெனவே விளக்கப்பெற்றுள்ளது. சில நிகழ்ச்சிகளைக் காண்போம். நற்றிணையில் ஒரு நிகழ்ச்சி, களவுத் திணையில் வருவது: களவுத் தலைவன் தலைவியை விரைவில் மணக்க விரும்பவில்லை. களவொழுக்கத்தை நீடிக்கவே விரும்புகின்றான். ஒருநாள் சிறைப்புறத்தில் அவன் வந்திருப்பதை அறிந்து கொண்டும் அறியா தாள் போலத் தோழி அவன் இயல்பை இகழ்கின்றாள். "இனி நாம் மேற்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று உண்டு. மலை நாடன் சான்றோனல்லன என்பது வெளிப்படை. நாம் நாணம்