பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெருந்தினை - 309 பொருட்டு நாண் வேலியைக் கடந்து செல்வர் என்று தொல் காப்பியம் பேசுகின்றது; இதுவும் அகப்பொருளில் அடங்குகின்றது. ஆவகை பிறவும் என்று அகத்திணை ஆசான் கூறுதலால், காமக் கூறுகள் மிகினும், நாணம் கடப்பினும் உள்ளப் புணர்ச்சிக்கு முரணின்றி நிகழுமாயின் அவை யாவும் அகப்பொருளில் அடங்கும் என்பது குறிப்பு. இவற்றிலிருந்து ஐந்திணை எந்நிலைக்கண் பெருந்திணையாகின்றது என்பது தெளியப்பபடும்.