பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Wi. அகத்திணை மாந்தர் அகத்திணையுலகில் தலைமை மாந்தர்களாக விளங்கு பவர்கள் தலைவனும் தலைவியும். இவர்தம் காதல், தழைத்து வளர்ந்து கணவன்-மனைவியாக:ஆவதில் பல நிலைகள் உள்ளன. இவர்களைப் பெயர் சுட்டிக் கூறும் வழக்கம். இல்லை. அக இலக்கியத்தில் இவர்தம் காதல் நிகழ்ச்சிகளாக வருவன சமுதாயத்தினின்றும் நல்லன. வாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவையாகும். மக்கள் நுதலிய அகன் என்று தொல்காப்பியர் கோடிட்டுக் காட்டுவதைக் காண்மின். சில நூற்பாக்களில் காணப் பெறும் சொற்போக்குகளும் இதனை வலியுறுத்துகின்றன. அகத்திணையில் காணப்பெறும் தலைவனிடம் ஒரு சில குறைகள் காணப்பெற்றாலும், தலைவி ஒரு குறிக்கோள் மகளாகவே காட்டப் பெறுகின்றாள். இல்லத்தில் சொல்லுரிமை உடையவள் இவள் என்பதைத் தொல் காப்பியர் 'அஞ்ச வந்த உரிமை' என்று சிறப்பிப்பர். இல்லற வாழ்க்கையில் தலைவியும் தலைவனும் ஒருயிரும் ஈருடலும் போன்றிருப்பர். இவர்தம் தொடர்பு பிறவி தோறும் தொடர்ந்து வருவதாகக் கூறப்பெறும். தலைவியின் நற்றாய், தலைவியின் தந்தை, செவிலி பாங்கன், தோழி, பரத்தையர் ஆகிய அறுவர் ஏதோ ஒரு மு ைற யி ல் தலைமக்களுடன் : உறவுடையோராகக் கொள்ளப்பெறுவர். இவர்தம் :உறவுகளைப்பற்றிய விளக்கத்தை இப்பகுதியில் காணலாம். இவர்களுள் செவிலியும் தோழியும் தலைவியின் களவு நெறியிலும் கற்பு நெறியிலும் பெரும்பங்கு ஆற்றுவது இப்பகுதியில் நன்று விளக்கம் பெறுகின்றது. இலக்கியச் சான்றுகளும், இலக்கணவிதிகளும் ஈண்டு விதந்தோதப்பெறுகின்றன.