பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/330

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயல் - 23 தலை மக்கள் அகத்திணையுலகில் உலவும் மாந்தர்களைப்பற்றித் தொல் காப்பியர், w மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்" என்ற அரியதொரு நூற்பாவில்ை குறிப்பிடுவர். இதன் முதலடியில் அகத்திணைக்கு உரிய நிலைக்களமும் அடுத்த அடியில் அகத்திணையுலகில் வரும் மாந்தர்கள் வழங்கப்பெறும் முறையும் கூறப்பெற்றிருத்தலைக் காணலாம். ஐந்திணைக் காதலொழுக் கங்கள் மண்ணுலகிலுள்ள மக்கள் அனைவரையும் கருதியதாதலின் தனியொருவர் பெயர் சுட்டி உரைக்கப்பெறும் மரவு இல்லை. 'ஐந்திணையும்' என்பதிலுள்ள எச்சவும்மையால் கைக்கிளை பெருந்திணையிலும் ஐந்திணையின் மரபே கொள்ளப்படும் என்பதையும் பெற வைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். அகப்பாடல்களை ஊன்றிப் பயில்வோர் அவற்றில் தலைவன், பாங்கன், பாணன், தந்தை எனவும்; தலைவி, தோழி, செவிலி, தாய், பரத்தை எனவும்; ஆண் பெண் மாந்தர்கள் சுட்டப் பெறுவதை அறிவர். அங்ஙனமே, நாடன், துறைவன், ஊரன், சேர்ப்பன் என்ற நிலப் பெயராலும்; உழவன், உழத்தி, ஆயன், ஆய்ச்சி என்று தொழிற் பெயராலும்; ஆடவன் நம்பி நங்கை எனப்பாற் பெயராலும்; அவன் அவள் என்ற சுட்டுப் பெயராலும் என்றவாறு யார்க்கும் ஏற்கும் பொதுனமப் பெயர்களாலேயே கூறப்பெற்றிருத்தலைக் காணலாம். எனவே, சங்க அகப்பாடல் களில் கிளவி மாந்தர்கட்கு இயற்பெயர் இல்லை என்பது அறியப் படும். 1. அகத்திணை-57 இளம்)