பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் - 343 புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே" என்ற நூற்பாவில் பெயர் புறத்திணையில் வந்தாலும் வரலாம்: அகத்திணையில் வருதலாகாது’ என்ற கருத்தினைப் பெற வைத்தல் காண்க. மேலும், எழுதினையும் அடங்க அகத்திணை மருங்கின்' என்ற பொதுச் சொல்லால் ஆசிரியர் கூறுதலும், இந்நூற்பாவின் உரையில் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வரும் என்று இளம்பூரணர் குறிப்பிட்டிருத்தலும் இக்கருத்திற்கு அரணாக அமைதலைக் காணலாம். ஈண்டு அகத்திணை மாந்தர்களின் இயற்பெயர் கூறா நோக்கம் யாது என்பதைச் சற்றுச் சிந்திப்போம். பண்டையோர் கண்ட அகத்திணை ஒருவன் அல்லது ஒருத்தியின் நல்ல அல்லது தீய காதற்களங்களை வரன்முறையாகத் தொகுத்துக் கூறுவது அகத் திணை அன்று. மக்கள் சமுதாயத்தில் எல்லா மாந்தரிடமும் காதல் நிகழ்ச்சிகளில் நல்லன என்று தேர்ந்து மேற்கொண்ட தனிக் காதல் ஒழுக்கங்களைப் புனையும் வரம்புடையது அகத்திணை எனவே, ஒருவரின் தனி வாழ்வினின்றும் தோன்றாது, சமுதாயத்தின் பலர் காதல் வாழ்வினின்றும் இது தோன்றின மையின் தனியாரின் பெயரிட்டு வ ழ ங் கு த ல் யாங்ஙனம் பொருந்தும்? ஒன்று கூறுவோம்: தக்காளிப் பழம் உடலுக்கு நல்லது; ஆப்பிள் உடலுக்கு நன்மை பயக்கும்; சாத்துக்குடியை அதிகமாக உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவோர் சாதாரண அறிவுடையவர்கள்; அநுபவ அறிவுடைய அறிஞர்கள். ஆயின், உணவியல் அறிஞர்கள் விட்டமின் சத்து உப்புப் பொருள்கள் இவை உடலுக்கு வேண்டுவன என்பர். இங்ஙனமே உடலுக்கு ஊட்டம் தரும் டானிக்குகளிலும், வேறு சத்து உணவுப் பொருள்களிலும் புரதம் இத்தனை விழுக்காடு, உப்புப் பொருள்கள் இத்தனை விழுக்காடு, மாப்பொருள்.இத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப் பெற்றிருக்குமே அன்றி பருப்பு, பழ வகைகள், கீரை வகைகள், கோதுமை, அரிசி போன்றவைகளின் பெயர்களைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை. இத்தகைய ஒரு முறையே-பொது முறையே-அகத்திணையிலும் கையாளப் பெற்றுள்ளது. மணிவண்ணன், மலர்விழி என்பன போன்ற 2, டிெ-58