பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/334

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


316 அகத்திணைக் கொள்கைகள் (i) தலைமகன் முதலாவதாக, அகத்திணையில் வரும் தலைமகனைப்பற்றி அறிவோம். இவன் கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் சிறந்தவன்; வழிவழியே வரும் உயர்குடியில் பிறந்தவன்; பெருஞ் செல்வத் திணன் இவனும் தலைமகளும் ஒருயிரும் ஈருடலும் போன்று நட் பினையுடையவர்கள். இவர்கள் தொடர்பு பிறவிதோறும் தொடர்ந்து வருவதாகக் கூறப்பெறும். இதனைத் தொல் காப்பியர், - ஒன்றே வேறே என்று இரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்' (பால்-ஊழ்; பாலது ஆணை-ஊழின் நியதி) என்று சிறப்பிப்பர். தலைவனும் தலைவியும் நெஞ்சமும் உயிரும் ஒன்றெனக் கொண்டு, இருவரும் ஒருங்கிருத்தலைக் காட்டும் அக தானுாற்றுச் சொல்லோவியம் இது: உயிர்கலந் தொன்றிய தொன்றுபடு நட்பிற் செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர்" (ஒன்றிய-பொருந்திய தொன்றுபடு-பல பிறவிகளிலும் தொடர்ந்து வரும்; செயிர்தீர்-குற்றமற்ற; செறிந்தோர் இணைந்தவர்.) இந்த அழகிய சொற்படத்தின் முன்னர் உலகத்து ஒளிப்படங்கள் காட்சியாலும் பொருளுணர்த்தலாலும் சிறிதும் நிற்க முடியாது என்பது வெளிப்படை. - மகன் என்ற சொல் வெறும் ஆண் மகனை மாத்திரம் குறிக்கும் சொல் அன்று. ஓர் ஆணிற்கு நல்லூழின் பெருக்கால் எய்தலாகும் எல்லா உயர்வுகளும் ஒருங்கு மேவிய பெருந்தகையை. மட்டிலும் குறிப்பிடும் சிறப்பு வாய்ந்த சொல் அது. ஒரு பெருந் தகைச் செல்வனைக் கண்டு, வியந்து, காதலித்த ஒரு தலைவி ஒப் புயர்வற்ற அவன் பெருமையினைத் தன் தோழிக்குக் கூறுபவள், "மகனே தோழி: ' என்கிறாள். இங்கினமே..இப்பெருமைகளை இழந்து நிற்பான் என்று ஒருவனைச் சுட்டுவதற்கு மகன் அலன் என்பதே போதிய சான் றாகும். பரத்தையின் வீ.ே கதி எனக் கிடக்கும் ஆண்மகன் ஒரு 3.