பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 323 பொருள் நுதலும் நூல்கள் இவளுக்குத் தங்கை தமக்கை இருப்பதாகவே காட்டவில்லை போலும். இவள் சிறுமியாக இருந்த பொழுது மிகச் செல்லமாக வளர்க்கப் பெற்றவள் என்பதைப் பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பாலை உண்ண மறுக்கும் சிறுவிளையாட்டியாகவும்' செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஆடுபந்து உருட்டுநள் போல ஒடி அஞ்சில் ஒதி இவளுறும் பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே." இடன்உடை வரைப்பு - அகன்ற இடம்; அம்சில் ஒதி - அழகிய சிலவாகிய கூந்தளுடையவள்) என்று பஞ்சு போன்ற மெல்லடியினை உடையாளாகவும் நற்றிணை குறிப்பிடுவதால் அறியலாம். இதனை அகநானூற்றுப் பாடல் ஒன்று மேலும் தெளிவுறுத்துகின்றது. இங்குச் சிறுமியாகிய தலைவி அதிக நேரம் விளையாடுவதைத் தாய் பொறுக்க முடியாத நிலையிலிருப்பதைக் காண்கின்றோம். விளையாட்டின் நடுவிலேயே ஒரு கிண்ணத்தில் பால் கொணர்ந்து அவளை அருந்தச் செய் - கின்றாள். அவளோ ஒரு சிறிது அருந்தியதும் ஒடுகின்றாள். எனக்காகச் சிறிது குடித்தாய்; உங்கள் அப்பாவிற்காகச் சிறிது குடி என்று கெஞ்சித் தன் செல்வக்குழந்தையை அழைக்கின்றாள். சீர்கெழு வியநகர்ச் சிலம்புநக இயலி ஓரை ஆயமொடு பந்துசிறி தெறியினும் வாரா யோவென்று ஏத்திப் பேர்இலைப் பகன்றை வான்மலர் பணிநிறைந்ததுபோல் பால்பெய் வள்ளம் சால்கை பற்றி என்பாடு உண்டனை யாயின் ஒருகால் நுந்தை பாடும் உண்என்று ஊட்டிப் பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான் நலம்புனைந் தெடுத்தான் பொலந்தொடிக் குறுமகள் அறனி லாளனோடு இறந்தனள்" - |வியன்நகர் - பெரிய மனை; சிலம்பு நக இயலி - சிலம்பு ஒலித்து விளங்க. ஒரை ஆயம் - விளையாடும் தோழியர் 38. நற். 110 39. டிெ. 324 40. அகம் 219