பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/345

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலை மக்கள் 327 செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான" என்ற நூற்பாவில் புலப்படுத்துவர். ஈண்டுச் செறிவு என்பது, அடக்கம்; நிறைவு என்பது, அமைதி; செம்மை என்பது, மனங் கோடாமை; செப்புஎன்பது, சொல்லுதல்; அறிவு என்பது, நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் அறிதல்; அருமை என்பது,உள்ளக் கருத்தறிதலருமை. இவை இளம்பூரணர் தரும் விளக்கமாகும். களவு நெறியில் தலைவிக்கு நேரிடும் இடர்ப்பாடுகள் பலப்பல. தினை அறுவடைக்குப் பின்னர் தினைப்புணங் காவலுக்குச் செல்லாளாதலால் தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பினை இழக்கின்றாள். இல்லத்திலோ அவள் புறத்தே தலை நீட்-ாசி படி இற்செறிப்பு. - யாயே கண்ணினுங் கடுங்கா தலளே எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடிசிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும்" என்ற அகநானூற்றுப்பாடற்பகுதியால் இதனை அறியலாம். இக் நிலையில் அவள் தன் திருமண ஏற்பாடு விரைவில் செயற்படல் வேண்டும் என்பதனைத் தோழிக் குணர்த்துவாள். மனைபட்டுக் கலங்சிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்" என்று இதற்குத் தொல்காப்பியர் விதி செய்து காட்டுவர். தோழி. தலைவனுடன் சந்திப்பை ஏற்படுத்தப் பகற்குறியும் இரவுக் குறியும் அமைப்பாள். அடிக்கடி இவற்றை ஏற்படுத்தினால் தலைவன் களவு நெறியிலேயே ஆழ்ந்து விடுவான் என்று கருதும் இவள் தலைவனைப் பல்வேறு விதமாக அலைக்கழிப்பாள். இதனை, . - - கங்குல் வருதலும் உரியை.' பகல்நீ வரினும் புணர்குவை' என்பன போன்ற பாடற்பகுதிகளால் தெளியலாம். தோழியின் நோக்கம் விரைவில் திருமணத்தை முற்றுவிக்க வேண்டும் என்பதே தோழியின் கருத்தினைத் தொல்காப்பியர், 50. பொருளியல் - 14 51. அகம் - 12 32. களவியல் - 21 53. அகம் - 2 54. Q్క - 18