பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 அகத்திணைக் கொள்கைகள் கற்பு நெறியில் : மணம் புணர்ந்து கணவனுடன் வாழுங் காலத்திலும் தலைவியின் அரிய பண்புகளை இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. கற்பு நெறியினைத் தொல்காப்பியர், மறைவெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.”* (மலிவு-மகிழ்ச்சி) என்று காட்டுவர். நாளாக நாளாகத் தலைவி தலைவன்பால் வைத்த அன்பு வலிதாகின்றது. கணவன் கருத்துப்படி நடந்து தன் அன்பையும் பண்பினையும் வெளிப்படுத்துகின்றாள்; குறிக் கோள் நெறியில் ஒழுகுகின்றாள். இவளுடைய இனிய மொழிகள் கணவனின் இதயத்தையும் உருக்குகின்றன. அன்பும் மடனும் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் ஒன்றுபடு கொள்கையொ டோராங்கு முயங்கி இன்றே இவணம் ஆகி’ (முயங்கி-தழுவி; இவனம் இவ்விடத்தேம்} என்ற அகப்பாடற் பகுதியால் இதனை அறியலாம். இவள் வீட்டு வேலைகளை உவப்புடன் மேற்கொள்ளுகின்றாள் என்பதை, . 'மனைமுதல் வினையொடும் உவப்ப' (மனைமுதல்-தலைவி; வினை-வீட்டு வேலை) என்ற அகப்பாட்டடி எடுத்தியம்புகின்றது. இயல்பாகவுடைய அட்டில் தொழில் முதலியவை போக, அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், விருந்தெதிர் கோடல் முதலியவற்றையும் மனமுவந்து செய்வதில் இவள் வல்லவளாகத் திகழ்கின்றாள். 62. தொல். செய், 179 63. அகம்-225 64. டிெ-51