பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 331 தலைவியின் இனிய இல்வாழ்க்கையை இவள் கூற்றாலேயே அறிகின்றோம். தலைவனைத் துணைவனாகக் கொண்டது தன் நற்பேறு எனக் கூறுகின்றாள் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி. திருமணம் நடைபெற்ற சின்னாள் கழித்து தோழி தலைவியின் இல்லத்திற்கு வருகின்றாள். அவளிடம் தான் தலைவனை அடைய அவள் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றாள். ' குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன் கெடுநா மொழியலன் அன்பினன்' என நீ வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனல் எமக்கே." குடி-உயர்குடிப்பிறப்பு: கூடுநர்-கூடுகின்றவர்கள்; நா. நாவால்; கெடுமொழி-தீச்சொல்; அஞ்சி-அதியமான்; தொல்இசை-பழையபுகழ்: நிறீஇய-நிலைபெறச்செய்த: நிறுத்த-வரையறை செய்த} என்ற பாடற்பகுதியால் தலைவியின் இனிய இல்லற வாழ்க்கையைக் காண்கின்றோம்; அவள் தன் கணவனிடம் கொண்டுள்ள பேரன் பினையும் பார்க்கின்றோம். இல்லற வாழ்க்கையில் தலைவி வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கியமாகத் திகழ்வதனைக் காண்கின்றோம். மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.' என்பது வள்ளுவர் வாய்மொழி. ஈண்டு மாண்பு என்பது, நற்குண நற்செய்கைகள். நற்குணங்கள்: துறந்தார்ப் பேணலும், விருந்தயர் தலும், வறியோர் மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய் கைகள் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் அறிந்து கடைப்பிடித் தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்பரவு செய்தலும் முதலாயின. இத்தகைய சீரிய குணங்களைத் தமிழியல் காட்டும் 65. டிெ-352 66. குறள்-51