பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/351

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 3 3 3 செல்க தேரே நல்வலம் பெறுந பெருந்தோள் துணுகிய நுசுப்பில் திருந்திழை அரிவை விருந்தெதிர் கொளவே.”* என்ற அகப்பாட்டுப் பகுதியால் இதனை அறியலாம். இல்வாழ்க்கையின் தலையாய பயன் மக்கட்பேறு என்று வள்ளுவர் கூறியதனை நாம் அறிவோம். மக்கட் பேற்றால் இம்மைப்பயனும் மறுமைப் பயனும் கைகூடும் என்று நூல்கள் நுவல்கின்றன. - * இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி. . (இசை-புகழ் மறு-குற்றம்; செறுநர்-பகவைர்; செயிர்தீர்குற்றமற்ற, காட்சி-அழகு: செம்மலோர்- தலைமையை யுடையவர்; வாயே-உண்மையே! என்று மகப்பேற்றின் பெருமையைப் பேசுகின்றாள் அகநானூற்றுத் தலைவியொருத்தி. தலைவி மைந்தன்மீது கழிபெருங் காதலை யுடையவள் என்பதை, - நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசுபட் டன்றே கலிங்கமும் தோளும் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுநாறும்மே.”* (குய்-தறும்புகை: கலிங்கம்-ஆடை: பிலிற்ற-பெருக: புனிறு-முடைநாற்றம்) என்ற நற்றிணைப் பாடற் பகுதி புலப்படுத்துகின்றது. திதலை-சுணங்கு: பிள்ளைப் பேற்றால் பெற்றோர் அடையும் பேரின்பம் சொல் லுந்தரமன்று. இந்த நிலையை ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று அழகாகச் சித்திரிக்கின்றது. 72. அகம்-374. 73. டிெ-66 74. நற்-380