பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலை மக்கள் 335 அவனுடைய சிறு குறும்புகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரு கின்றன. இங்ஙனம் பிள்ளைப்பேறு தலைவிக்குப் பேரின்பம் பயக்கின்றது." நச்சினார்க்கினியரின் புதல்வனால் தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது. புதல்வனும் செல்வமாதலின் என்ற உரை நயமும் சிந்தித்து மகிழத் தக்கது. சிறுவன் தலைவன்-தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாக வும் அமைகின்றான். பரத்தை காரணமாகத்தலைவி ஊடுகின்றாள். பரத்தையிடமிருந்து திரும்பி வந்த தலைவனிடம் தன்மகன் செல் வதை விரும்பவில்லை சினம் மிக்க தலைவி. ஆயின், சிறுவனோ அன்னையின் சினத்தை யறியாதவனாய்த் தந்தையின் மார்பை நோக்கிப் பாய்கின்றான். இதனை, - குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாய்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா அன்பிவி பெற்ற மகன்' இறுவரை-மலையின் அடிப்பகுதி: கோண்மா-சிங்கம்: இவர்ந்தாங்கு-பாய்ந்தாற் போல்} என்ற கலிப்பாப் பகுதியால் அறியலாம். இத்தகைய ஒர் அகநா னுாற்று நிகழ்ச்சியையும் காண்போம். செவிலியிடம் குழந்தை உள்ளது. பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவன் தலையை நெருங்குகின்றான்.தலைவனின் பரத்தமையைப்பொறாத தலைவி. 'நீவிர் பரத்தையரிடம் இருக்கத் தகுதியுடையவர்: யானோ என் செல்வக் குழவியுடன் இருக்கத் தகுதியுடையவள் என்று கூறி மகனிடம் செல்லுகின்றாள். தலைவனும் யானும் நம் குழவியிடம் இருக்கத் தகுதியுடையவன் என்று கூறிக் கொண்டே தலைவியை இறுகப் புல்லுகின்றான். தலைவியின் நெஞ்சமும் பலமுறை உழுது செம்மையான செய்யின் மண் மிகுந்து பெய்யும்மழைக்குக் கரைதல் போல் நெகிழ்ந்து விடுகின்றது. சினமும் இருந்த இடம் தெரியாமல் மறைகின்றது.' - நற்றிணைத் தலைவியொருத்தி பிள்ளைப் பேற்றால் பெரு மகிழ்வு எய்துகின்றாள். பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் தன்னிடம் மீண்டு வருங்கால் பெருமிதம் தோன்றப் பேசும் தலை வியின் பேச்சில் இது வெளிப்படுகின்றது. - * 78. கலி-85 79. டிெ-86 80. அகம்-26.