பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலை மக்கள் 337 இல்லற வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளைத் தேடும் பொருட்டுச் சென்ற தலைவன் பிரிவை மிகப் பொறுமையுடன் தாங்குகின்றாள். தலைவனின் சொல்லில் பெரு நம்பிக்கை வைக் கின்றாள். ‘காதலர், நிலம்புடை பெயர்வ தாயினும், கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே” (புடை பெயர்தல்-நிலையினின்று மாறுதல்) என்ற நற்றிணைத் தலைவியின் பேச்சால் இதனை அறியலாம். தலைவியொருத்தி தலைவனின் பிரிவு நீட்டிப்பினால் வேறுபாடு உறுகின்றாள். தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலை வன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக்கொடுமை கருதி அவனாற் குளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்குமென்று கவல் கின்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்யவேண்டும் என்று தெய்வத் தைப் பரவுகின்றாள்.'" இவற்றால் தலைவி தலைவன்மீது வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கை தெளிவாகின்றது. குறுந்தொகைப் பாடலொன்றால் தலைவன்பால் தலைவி கொண்டுள்ள பேரன்பை அறிகின்றோம். பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன் வீடு திரும்புகின்றான். அன்றிரவு தலைவியுடன் பாயல் கொள்ளுகின்றான். இரவு கழிந்ததே தெரியவில்லை; ஒரிரவு அவளுக்கு மனநிறைவினைத் தரவில்லை. ஏம இன்றுயிலைத் தரும் அவ்விரவு விரைவிற் புலர்ந்தது கண்டு துயருறுகின்றாள். காம மயக்கத்தால், புலர்ந்ததென உணர்த்திய சேவலின்பாற் குறையுள்ளதாகக் கருதி எம்மை எழுப்பிய நீ இல்லெலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு இரையாகி மிக்க துன்பத்தை அடைக’ என்று சபிக்கின்றாள். இதனால் தலைவன்பால் தலைவி கொண்டுள்ள அன்பின் உறைப்பு வெளியாகின்றது. இல்லற வாழ்வில் தலைவன்-தலைவரிடையே எழும் காதல் பூசல் ஊடல் எனப்படும். சங்க இலக்கியங்களும் கோவை நூல் களும் இது பரத்தை காரணமாகவே நேரிடுவதாகப் பரக்கப் பேசு 83. நற்.289 84. குறுந். 87 அ 22