பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 345 பேரின்பம் ஆகுமே. இப்பொழுதோ அவனுடன் புணர்ந்து செல்லுங்கால் வரும் ஓரின்பமே அன்றி, வழியில் அவட்கும் துன்பம், அந்நம்பிக்கும் துன்பம், நமக்கும் எல்லையில்லாத் துன்ப மாக முடிந்ததே! இத்தகைய செயலை எற்றிற்குச் செய்தல் வேண்டும்?' என்று நொந்து கூறியதைக் காண்க. - நற்றாய் ஒருத்தி தன் மகள் அறநெறியிஃதென உணர்ந்து உடன்போக்கினை மேற்கொண்டமைக்கு மகிழ்ந்து தன் மகள் சென்ற பாலை நிலம் தண்ணியதாகுக என்று தெய்வத்தைப் பராவுகின்றாள். சுரநணி யினிய தாகுக தில்ல அறநெறி இதுவெனத் தெளிந்தனன் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.” என்ற பாடற் பகுதியால் இதனை அறியலாம். எனினும், தன் மகளைப் பிறள் ஒருத்தி மகன் வஞ்சித்து அழைத்துப் போயினமை குறித்து நெஞ்சங் கவலும் தாய் தன்னைப்போலவே தலைவ னுடைய தாயும் பெருந்துயர் எய்தட்டும் எனச் சபிக்கின்றாள். நினைத்தொறுங் கவிழும் இடும்பை எய்துக புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பினை அணைதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுரம் என்மகள் உய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே.' (கலை-ஆண்மான்; அணைதர்-சேரும் பொருட்டு; உய்த்தசெலுத்திய வம்பு அமை-புதிய மூங்கில்) என்ற பாடலில் இதனைக் காணலாம். இங்ஙனம் தாயின் பல் வேறு உணர்ச்சிகளைக் கண்டு” அவள் தன் மகள்பால் கொண் டுள்ள பேரன்பினை உய்த்துணரலாம் - அகநானூற்று நற்றாய்" ஒருத்தியிடம் ஊர்ப் பெண்டிர்கள் பலகாலம் நாடோறும் ஓய்வு ஒழிவின்றி வந்து நின்மகள் இன்ன தலைவனைக் காதலிக்கின்றாள், இன்ன இன்னவாறெல்லாம் ஒழுகுகின்றாள் என அலட்டுகின்றனர். அவளோ இவர்கட் 20, ഖു-371 21. டிெ-373 22. டிெ-38 ஆம் பத்தில் 23. செவிலி' என்றும் கூறுவர் (நாவலர் நாட்டார் உரை காண்க.).