பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


346 - . அகத்திணைக் கொள்கைகள் கென்னையோ கேடு!" என எண்ணி அவர்களை வெறுக்கின்றாள். ஊர் அலர்களைத் தன் மகள் அறிவிப்பின் உள்ளம் நாணி வருந்து வள் என எண்ணி மறைத்து வருகின்றாள் (ஆயின், விரைவில் அம் மகட்கு அவள் காதலனுடன் மணம் புணர்ப்பதில் ஊக்கம் கொண்டு ஆவணசெய்து வருகின்றாள்). இதனை அவள்மகள் அறிந் திலள். தன் கரந்துறை ஒழுக்கத்தை அன்னை அறியாள் எனவும், அறியின் தான் மனையில் சிறிதும் தங்க இயலாதெனவும், ஒரோ வழித் தன் காதலன் கூட்டுறவு கிட்டா தொழிய நேரிடலாம் எனவும் எண்ணி மயங்கிக் காதலனுடன் அவன் இல்லிற்கேகி அங்கு மணம் செய்து கொள்ளத் துணிந்து, இரவில் தாய் அறியாமல் அவனுடன் வெளிப்பட்டுச் செல்லுகின்றாள். இதனை அறிந்த அன்னை அவள் நிலைக்கு இரங்கிக் கவன்று, 'அந்தோ, இவள் என்னுள்ளம் அறிந்திலளே; அவள் எண்ணியது தவறு என்பதை அவள் உணரச் செய்வேன்' என்று உறுதி கொள்ளுகின்றாள் உடனே வேறு வழியாக அவர்கள் செல்லும் நெறியிலுள்ள ஒரு சிற்றுார்க்குச் சென்று அவர்கள் அறியாத மாற்றுருவில் நின்று அவர்கட்குத் தேவையான உதவிகள் செய்தனுப்ப எண்ணு கின்றாள் (எண்ணியவள் அவ்வாறே செய்தாள். பின்னர் தலைவி தனக்கு உதவி செய்தவள் நற்றாயே என உணர்ந்து கழிபெரும் மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்கின்றாள்). இந்நிகழ்ச்சியைக் கபிலர் தம் சொல்லோவியத்தால் ஒரு படக்காட்சியைக் காட்டுவதுபோல் காட்டுகின்றார்." இந்நிகழ்ச்சியும் நற் றாய் என்ற பெயரை உறுதிப்படுத்துகின்ற தன்றோ? . தலைவி தலைவனுடன் உடன் போக்கில் பிரிந்து செல்லு கின்றாள். தலைவி கையாண்ட பாவை. பூவை, பைங்கிளி, பந்து கழங்கு முதலிய பொருள்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நற்றாய் கண் கலங்கி வருந்துகின்றாள். ...அத்தம் சென்றனள் மன்ற என் மகளே பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே." (அத்தம்-பாலை நிலத்துப் பாதை: ஒழித்து-விட்டு வைத்துi 24. அகம்-203. 25. ஐங்குறு-377