பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 347 என்று நற்றாய் கலங்கிச் சொல்லி வருந்தியதைக் காண்க. மறைந்த தலைவியைச் சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு நற்றாய் கூறி வருந்துவது தம் உள்ளத்தை மிகவும் உருக்கு கின்றது. 'இதுவென் பாவைக் கினியநன் பாவை: இதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி; இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்(று) அலமரு நோக்கின் அலம்வரு சுடர்நுதல் காண்டொறும் காண்டொறும் கலங்க நீங்கின ளோஎன் பூங்க னோளே." (அலம்வருதல் சுழலுதல்;பூங்கண்ணோளே-அழகிய கண்ணை யுடையவள்) -> தன் மகள் விரும்பி யாடிய பொருள்கள் தன்னால் அடிக்கடி பார்க்கப்படுதலும் பார்க்கும்பொழுதெல்லாம் அவள் நினைவே தோன்றித் தன்னை வருத்தும் என்றும், அவளது சுழல் விழியும் சுடர் நுதலும் தன் நெஞ்சத்தே நின்று இடையறாது வருத்தும் என்றும் கலங்கிக் கூறுவதைக் காண்க. தன் மகள்பால் இவள் கொண்டுள்ள பற்று, - யாயேகண்ணினும் கடுங்கா தலளே." என்ற கபிலர் வாக்கினால் நன்கு அறியலாம். தலைவிக்கு அவள் 'கடுஞ் சொல் அன்னை யாகத் தோன்றினும் அவளுடைய 'தாய்ப் பாசம் அளவற்றது என்பதை நாம் அறிவோம். இத்தகைய நற்றாய் தன் மகளைப்பற்றி அலர் எழுங்கால் கடுஞ் சினம் கொள்வாள். இவள் எவ்வகையானும் அம்பலையோ அலரையோ விரும்புவதில்லை. இதனைக் கேட்டவுடன் இவள் மனம் கொதித்தெழும். - கெளவை மேவலராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லவென் மகட்கு." (கெளவை-அலர் நிரைய-இழிந்த இன்னா-இன்னாத sொற்கள்: புரைய-பெர்ருந்துவன). 26. ഞു.-375 27. அகம்-12 28. டிெ-95