பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/371

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 353 சீர்கெழு வியநகர் சிலம்புநக வியலி ஓரை ஆயமொடு பந்துசிறி தெறியினும் வாரா யோவென்(று) ஏத்திப் பேரிலைப் பகன்றை வான்மலர் பணிநிறைந் ததுபோல் பால்பெய் வள்ளம் சால்கை பற்றி என்பாடு உண்டனை யாயின் ஒருகால் நுந்தை பாடும் உண்ணென்று ஊட்டிப் பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான் நலம்புனைந் தெடுத்தஎன் பொலந்தொடிக்குறுமகள் அறனி லாளனோடு இறந்தனள்' |வியன் நகர்-பெரிய மனை, சிலம்புநக-சிலம்பு ஒலிக்க; ஒரை ஆயம்-விளையாடும் தோழியர் கூட்டம்; ஏத்தி-பாராட்டி, பகன்றை-ஒருவகைத் தாவரம்: வள்ளம்-கிண்ணம்; பாடுபகுதி, பிறந்ததற் கொண்டு-பிறந்த நாள் தொட்டு; அறன் இலாளன்-தலைவன்.) இதில் வரும் நிகழ்ச்சி : அகன்ற மனையகம் எல்லாம் சிலம்பொலி முழங்க ஒடியும் ஆடியும் விளையாடுகின்றாள் மகள். ஆயவெள் ளத்துடன் பந்தாடுகின்றாள். இதற்குள் அவளுடைய உடம்பு இளைத்தும் களைத்தும் விட்டதென்று எண்ணிய செவிலி பாற் சோறிட்ட வெள்ளிக் கிண்ணத்தைக் கையேந்திச் சென்று, 'என் கண்ணே, வாராய்' என அன்புடன் அழைத்து, எண்க்காக ஒரு பிடி உண்டனை. உன் தந்தைக்காக ஒரு பிடி உண்க. அம்மே” என்று உரைத்து ஊட்டுவாள். இங்ஙனம் செல்லமாக வளர்ந் தவள் பிரிந்துபோய் விட்டாளே என்று கலங்குகின்றாள். தலைவியின் களவு நெறியிலும் கற்பு நெறியிலும் செவிவி ஆற்றும் பங்கு மிகப் பெரியது. இவளது பங்கினைச் சற்று விரி வாகக் காண்போம். கனவு நெறியில்: செவிலிதலைவியை வளர்க்கும்பொறுப்பினை மேலே கூறினோம். அவளைப் பழியொடு படாத நிலையில் காத்தல், நன்னெறியில் மேவும் காதற் கூட்டத்தை ஏற்றல், அவளை நற்றாய்க்கு உரைத்துப் போற்றல், உடன்போக்கில் தேடி அலைதல், தலைவியின் வரைவிற்கு ஆவன செய்தல் 48. அகம்-216. அ-23