பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/373

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 355 தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே' (அத்தம்-வழி; அவன்-தலைவன்; முத்துஓர்-முத்தினை யொத்த மடவரல்-மடப்பத்தை யுடையவள்; பெயர்நற்பெயர்; வல்லாறு-இயன்றவகை) இதில் செவிலி, ஒருவர் நற்பெயர் எடுக்க வேண்டுமாயின் ஆற்றலான் முயன்று எடுத்தல் வேண்டுமன்றே! அவ்வாறே நானும் அரிதின் முயன்று இன்னானோடு ஓடிவிட்ட இன்னவள் தாய் என்னும் பெயரை எடுத்துள்ளேன் காண்!” என்று இகழ்ச்சிக் குறிப்பால் நொந்து கூறியதைக் காண்க. தலைவியைத் தன் கையகலாது அகத்தும் புறத்தும் பேணி வளர்த்தவளாதலின், தலைவியின் உடன்போக்குப் பிரிவின்கண் செவிலியின் கூற்றுகள் மிக்க இரக்கங் கொண்டனவாக இருக்கும். தலைவி தமரை விட்டுத் தலைவனுடன் உடன் போக்கில் பிரிகின்றாள். இதனை அறிந்த செவிலி கூறுவது: பெயர்த்தனென் முயங்க,யான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேன்.அது துனியா குதலே' (பெயர்த்து-மீண்டும்; முயங்குதல்-தழுவுதல்; துணி. வெறுப்பு! 'நான் நேற்று வழக்கம்போல் என் மகளைத் தழுவவும் அவள் அதனை வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுது அறிந்திலேன், இப்பொழுது அறிந்தேன்' என்று செவிலி கூறி இரங்குவதைக் காண்க. ஒரு தலைவனது முயக்கத்தையே இன்பமாகக் கருதியவளாதலின் முன்பு விருப்பாயிருந்த தன் முயக்கம் தற்பொழுது வெறுப்பாயிற்றுப் போலும் என்று செவிலி குறிப்பாகப் புலப்படுத்துவதை உணர்ந்து மகிழ்க. அகநானூற்றுச் செவிலி யொருத்தி முன்னாள் ஈன்றணிமை கொண்ட கன்றினைக் கண்டு நெகிழும் கறவையெனத் தலைவி யைக் கண்டு அணுகி நுதல் நீவித் தழுவினள்; தலைவி பிற்றை ஞான்று பிரிய விருத்தலின் எஞ்ஞான்று மில்லாதவாறு பலகால் 32. ஐங்குறு-380 53. குறுந், 84