பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 அகத்திணைக் கொள்கைகள் செவிலியை முயங்கினள். அவள் அங்ஙனம் முயங்கிய கருத்தினை அது காலை உணராதவள் அடுத்த நாள் உணர்ந்து வருந்து சின்றாள். கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக் - குறுக வந்து குவவுற னவி மெல்லெனத் தழிஇயினே னாக, என்மகள் நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப் பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ காடுடன் கழித லறியிற் றந்தை அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்ச் செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக் கோதை யாயமோ டோரை தழிஇத் தோடமை யரிச்சிலம் பொலிப்ப அவள் ஆடுவழி யாடுவழி அகலேன் மன்னே" (கொடுந்தொடை-வளைந்த தொடை, குழவி-கன்று; யாத்த-கட்டப் பெற்ற: கடுங்கண்-விரைந்து விரைந்து பார்க்கும் கண், கறவை-பசு:சிறுபுறம்-முதுகு; குவவுதுதல். வளைந்த நெற்றி, நன்னர்-நன்கு; ஆகம்-மார்பு முயங் கினள்-தழுவினள். அல்குபதம்-வைத்திருந்து உண்ணும் உணவு: கடி-காவல்; வியனகர்-மனை; ஆயம்-தோழியர் கூட்டம்: ஒரை-விளையாட்டு தோடு-தொகுதி, ஆடுவழி. விளையாட்டிடம்) என்ற பாடலில் செவிலி வருந்துவதைக் காண்க. பாடலின் பிற்பகுதியில் செவிலி தலைவியை வளர்த்த அருமை புலனாதல் கண்டு தெளிக. செவிலி இங்ஙனம் கூறும் இடமெல்லாம் தலைவியது மென்மைத் தன்மையும் சுரத்தின் கடுமையும் நினைந்து நினைந்து உருகுவதைக் காணலாம். குறுந்தொகைச் செவிலி யொருத்தி இரங்குதலை இப்பாடலில் காண்க. : - 54. அகம்-49 始