பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 அகத்திணைக் கொள்கைகள் (வளம்-செல்வம்: கெழு-பொருந்திய திருநகர்-மனை: ஆயம்-தோழியர் கூட்டம்: உயங்கிற்று-வருந்திற்று அசை இ-தளர்ந்து: வதியும்.அமர்வள்; நொதுமலாளன்-ஏதி வாளன்: முதுக்குறைவி-மூதறிவுடையவள்: வல்லகொல்வல்லுநவோ, கவலைய-கவர்த்த: அதர்-வழி நீள் அரைநீண்ட அடி; ஊழ்கழி-முதிர்ச்சிமிக்க: விறல்-வெற்றி, கால்காற்று; வைகுறு-விடிகின்ற: மை-மேகம்) என்ற அகப்பாடலில் கண்டு தெளியலாம். தலைவி தலைவனுடன் உடன் போக்கில் சென்ற பிறகு செவிலி அவர்களைப் பாலைநிலத்தில் தேடிச் சென்று காணாமல் வருந்திக் கூறுகின்றாள். காலே பரிதப் பினவே; கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந் தனவே அகவிரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் உலகத்துப் பலரே." (கால்-கால்கள்; பரிதப்பின-நடை ஓய்ந்தது; வாள்.ஒளி, விசும்பு-வானம்; மீன்-நட்சத்திரம்) 'நடந்த கால்களும் ஒய்ந்தன; பார்த்த கண்ணும் ஆத்தன. இருவரையும் கண்டேன் இல்லை என்று செவிலி வெறுத்துக் கூறு வதைக் காண்க. உடன் போக்கில் இவர்கள் சென்றதைத் தோழி மூலம் அறிந்த செவிலியொருத்தி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் காட்சியையும் காண்கின்றோம். வாயா கின்றே தோழி ஆய்கழல் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே' (வாய் ஆகின்று-உண்மையாயிற்று; ஆய்கழல்-அழகிய வீரக் கழல்; விடலை-தலைவன்; மடந்தை-தலைவி) என்ற பாடற்பகுதி இ தனைப் புலப்படுத்துகின்றது. இங்ஙனம் எத்தனையோ நிகழ்ச்சிகளை அகத்துறைப் பாடல்கள் சித்திரித்துக் காட்டுகின்றன. - 57. குறுந். 44. 58. டிை-15.