பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/377

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 3. தலைமக்களுடன் உறவுடையோர் கற்புநெறியில் : சற்புக் காலத்தில் தலைவன் மனைக்குச் செல்கின்றாள் செவிலி. அங்குத் தலைவனும் தலைவியும் ஆவியும் உடலும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாராய் அன்பால் கலப்புற்று இன்புற்றமர்ந்து வாழ்கின்ற நல்வாழ்க்கையைக் கண்ணுறுகின்றாள். ஆங்குத் தான் நெஞ்சும் கண்னும் குளிரக் கண்ட காட்சிகளை நற்றாய்க்குக் கூறி அவளை மகிழ்விக்கின்றாள். இங்ஙனம் உவந்த உள்ளத்தளாய் செவிலி கூறுங் பத்துப் பாடல் களை ஐங்குறுநூற்றில் 'செவிலி கூற்றுப் பத்து' என்ற தலைப்பில் ஒருசேரக் காணலாம். அவற்றுள் ஒரு காட்சி. மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி நீல்நிற வியல்அகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே" (மறி-மான்குட்டி நடுவணன்-நடுவில் இருப்பவன்; நன்றும்பெரிதும்: முனிவு-பெறுப்பு: மன்ற-தேற்றமாக, நீல்நிறம். நீலநிறம்: வியல் அகம்-அகன்ற வாணவெளி: ஈனும்-இந்த உலகமும்; உம்பர்-தேவர் உலகம்] . மனைமாட்சியின் மங்கலத்தையும் மக்கட்பேற்றின் நன்கலத்தினை யும் ஒருங்கே பெற்றுத் தலைவலும் தலைவியும் காதல் என்னும் இன்பக் கடலுள் மூழ்கிக் கிடப்பதைக் கண்ட செவிலி இதுவே. இன்பத்தின் கொடுமுடி என்பதை நற்றாக்கு உணர்த்து கின்றாள். குறுந்தொகைச் செவிலி யொருத்தி தன் மகளிள் இல்லறம் நடத்தும் கடிமனைக்குச் செல்லுகின்றாள்; அங்கு அவள் செய்யும் அறத் துறைகளை காண்கின்றதுள். தலைமகனது சிறப்பும், இருவரது வாழ்க்கைச் சிறப்பும் செவிலிக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகின்றன. பின்னர் அவள் தன் மனைக்கேகி ஆங்கு நற்றாயைக் கண்டு அவளிடம் தலைவி, தலைமகனை உண்பிக்கும் திறத்தைச் சிலவாய சொற்களால் பலவாய பொருள் பொதுள இனிது கூறுகின்றாள். 59. ஐங்குறு-41-ஆம்பத்து. 60. டிெ-401