பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/379

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 361 இது காறும் கூறியவற்றைக் கூர்ந்து நோக்கின் தலைவிபால் அன்பு வைத்தார் எவரினும் செவிலி அன்பிற் குறைத்திலள் என்று கூறி முடித்திடலாம். iv பாங்கன் பாங்கன் என்வவன் தலைவனுக்குத் தோழனாக இருப்பவன். தலைவன் களவு ஒழுக்கத்தில் ஒழுகும்போது அவனுக்கு உற்ற துணைவனாக இருந்து கொண்டு அவன் செயல்களில் உதவி புரிபவன். இடந்தலைப்பாட்டிற்கு அடுத்ததாகத் தலைவியுடன் நிகழும் கூட்டம் இவன் துணையாலே நிகழ்வது. தலைவியைச் சந்தித்து அவளுடன் கரந்து ஒழுகும் ஒழுக்கத்தால் அவன் உடலில் காணும் சில தோற்ற வேறுபாடுகளைக்கண்டு அவற்றிற் குரிய காரணத்தை வினவுகின்றான். - கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக் கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல் கான ஞாழல் கவின்பெறு தழையள் வரையர மகளிரின் அரியள் என் நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே." (கோடு-சங்கு; வளை முன்கை வார் முன்கை எனத் தனித் தனி கூட்டுக. தொடர்ந்த-சூட்டப் பெற்ற இரும்-கரிய, கானல்-கடற்கரைச் சோலை ஞாழல்-ஒருவகை மரம் அரு நிறை-அழித்தற்கரிய நிறை) இதில் தன் நெஞ்சத்தைக் கவர்ந்தவள் வரையர மகளிரின் அரியள் என்கின்றாள். பாங்கன் தலைமகன் கூறிய குறிவழிச் சென்று அவளைக் காண்கிறான். கண்டவன் தன்னுள்ளே கூறு கின்றான். இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்ணறு நெய்தல் நாறும் - பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே." 65. ஐங்குறு-191; ஒப்பிடுக-255. 66. டிெ-173.