பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366 அகத்திணைக் கொள்கைகள் நல்லறிவும், உள்ளக் கருத்தறிதல் அருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறர் அறியாது ஒழுகும் அடக்கமும், மறை புலப் படாமல் நிறுத்தும் நல்லுள்ளமும், மாசற்ற அறிவுணர்ச்சியும், செய்யத்தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக் குணங்கள் முழுவதும் தோழியினிடத்து ஒருங்கமைந்திருத்தல் புலனாகும் இவ்வாறு பெறுதற்கரிய பெருங் குணங்கள் யாவும் ஒழுங்கு வாய்க்கப்பெற்றவளே தோழி எனப் பாராட்டுவதற்குரியவள் என்பார் தாங்கருஞ்சிறப்பின் தோழி’ எனத் தொல்காப்பியரும் அடைகொடுத்துச் சிறப்பிப்பர். இருவகைக் கை கோள்களிலும் ஒரு சில இடங்களில் தோழியின் இன்றியமையாத பங்கினைக் கண்டு தெளிவோம். (அ) களவு நெறியில் மதியுடம் படுத்தல்: இந்தக் கட்டத்தில் தோழியின் உயரிய உய்த்துணர்வினைக் காண்கின்றோம். தன் இயற்கைப் புணர்ச்சியைத்தோழிக்கும் புலப்படுத்தவில்லை தலைவியொருத்தி. ஒருநாள் தலைவியும் தோழியும் தினைப்புனம் காத்து நின்ற விடத்து தலைவன் கையுறை கொண்டுவந்து அவர்களிடம் குறை வேண்டுவான்போல் நிற்கின்றான். தோழி அப்போது நிகழும் அவ்விருவர் மெய்ப்பாடுகளையும் கூர்ந்து நோக்கி அவர்களிடையே கூட்டமுண்மையைத் துணிகின்றாள். ஏனல் காவல் இவளும் அல்லள்: மான்வழி வருகுவன் இவனும் அல்லன்: நரந்தங் கண்ணி இவளோடு இவனிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே; நம்முன் நானுநர் போன்று தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல உள்ளத் துள்ளே மகிழ்ப; சொல்லும் ஆடுப கண்ணி னானே' (ஏனல்-தினை, கரந்த உள்ளம்-மறைத்த ந்ோக்கம்; சொல் ஆடுதல்-உரையாடுதல்) இந்த அழகிய பாடலில் தோழியின் உய்த்துணர்வு செயற்படு வதைக் கண்டு மகிழ்க. - 80. களவியல்-23 (நச்சினார்க்கினியர் உரை மேற்கொள்)