பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/385

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 367 குறியிடங்கள் அமைத்தல்: தொல்காப்பியரின் புணர்ச்சி வேண்டியனும்' என்ற விதியால் இவை தோழியால் அமைக்கப் பெறும், இரவு வருவானைப் பகல் வாவென்றலும், பகல் வருவானை இரவு வாவென்றலும், குறிபெயர்த்தலும் எல்லாம் இவ்விதியாலேயே கொள்ளப்பெறும். தலைவியைக் குறியிடத்து உய்த்துத் தலைமகனிடம் கூறுகிறதாக அமைந்த குறுந்தொகைப் பாடல்: நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி நின்குறி வந்தனென்; இயல்தேர்க் கொண்க! செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற - நாரை மிதிக்கும் என்மகள் துதலே.”* (பாவை கிடப்பி - பாவையை வளர்த்திவிட்டு: நின்குறி - நீ இருக்குயிடம்; கொண்க - தலைவனே; செல்கம் போகின் றோம்; செலவியங்கொண்மோ - அவளைப் போகும்படி நீயே ஏவுவாய்; அல்கலும் - இரவு வருதலும், துதல் - நெற்றிi. இதில் தலைவியைக் குறியிடத்து நிறுத்தி வந்த தோழி, தலை வனிடம் அதனைக் குறிப்பாகப் புலப் படுத்துகின்றாள். 'வந்தனென்’ என்று முதலில் ஒருமையால் கூறிப் பிறகு செல்கம்’ எனப் பன்மையாற் கூறினமையின் தோழியுடன் தலைவி வந்துள் ளாள் என்பதையும், அவளைக் குறியிடத்தே நிறுத்தித் தோழி வந்தனள் என்பதையும் தலைவன் அறிவான். இன்னோர் இடத்தில் பகற்குறியின்கண் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடம் கூறு கின்றாள் தோழி. - ஊர்க்கும் அணித்தே பொய்கை: பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே; இரைதேர் வெண்குரு(கு) அல்லது யாவதும் துன்னல்போ கின்றுஆல் பொழிலே யாம்எம் கூழைக்(கு) எருமண் கொணர்கம் சேறும்; ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே’’ 81. ைெடி-24 (அடி-22) (இளம்). 82. குறுந் 114. 83. டிெ-113.