பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உ றவுடையோர் 373 குன்றக் குரவன் ஆரம் அறுத்தென நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்துதல் குறுமகள் கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே." (ஆரம் - சந்தன மரம்; அறுத்தென - அறுத்துச் சுட்ட மையால், நாறும் - கமழும்; இமிர் - இசை பாடும்; நுதல் - நெற்றி, கொண்டனர் - அழைத்துப் போவார்; செல்வர் - தலைவர்i 'தலைவர் நின்னைத் தம் நாட்டுக்குக் கொண்டு போக உடன் பட்டுவிட்டனர்' என்ற செய்தியைத் தலைவிக்கு உணர்த்து கின்றாள் தோழி. குன்றக் குரவன் ஆரம் அறுத்துச் சுட்டமை யால் நறும் புகை சூழ்ந்து காந்தள் மலர் மணத்தோடு விரவிக் கமழும் என்பது உள்ளுறை. இதில் ஆரம் சுற்றத்தினர். அதனை அறுத்துச் சுடுதல் - அவர் தொடர்பறுத்து விடுதல்; நறுபுகை தலைவி: காந்தள் மலர் மணம் - தலைவனோடு கூடிச் செய்யும் இல்லறப் புகழ். "நீயும் நின் சுற்றத்தார் வருந்தினும் அவரைப் பிரிந்து போய்த் தலைவருடன் அவர் மனைக்கண் இருந்து அறம் விளைவித்துப் புகழ் விளைக்கக் கடவை' என்பது உள்ளுறையாற் போந்த பொருள். இங்ஙனம் சாதுர்யமாகக் குறிபெச்சப் பொருளுடன் பேசும் தோழியின் திறத்தை எண்ணி மகிழ்க. தலைவியொருத்தி தன்னுடன் உடன் போக்கிற்கு இசைந் தமையை உணர்ந்த தலைவன் தோழியிடம் பாலை நிலத்தின் கொடுமையையும் தல்ைவியின் மென்மையையும் கருதிசெலவழுங்க லுறுகின்றான். தோழி அவனுடன் இனிமையாகப் பேசி செலவு உடம்படச் செய்கின்றாள். நீர்கால் யாத்த நிறையிதழ்க் குவளை கோடை யொற்றினும் வாடா தாகும் கவணை (யன்ன பூட்டுப்பொருதசாஅ உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன முளிசினை பிளக்கும் முன்பின் மையின் யானை கைமடித் துயவும் - கானமும் இனியவாம் நூம்மொடு வரினே.” 90. டிை-254 91. குறுந் 388