பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 375 மென்னடை மரையா துஞ்சும் நன்மலை நாட! நின்னல திலளே.”* (பெருநன்று - பெரிய நன்மை; ஆற்றின் - செய்தால்; பேனாரும் - போற்றாதாரும்; ஒரு நன்று - சிறிதளவு நன்மை; புரி மாண்டு - விருப்பம் மாட்சிபட்டு; தீர-நீங்கும் i-Jij-, அளிமதி - பாதுகாப்பாயாக; ஆடு.அமை - அசை கின்ற மூங்கில்கள், ஒழுகிய- நீண்டு வளர்ந்த, மரைஆ . காட்டுப் பசு) - இதில் இவள் நினக்குப் பல வகையிலும் இன்பம் தரும் நிலையில் உள்ளாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உதவி செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின்பாலுள்ள அன்பொன்றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்' என்று தோழி. கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தலைக் காண்க. (ஆ) கற்பு நெறியில் தலைவனைத் தெருட்டுதல்: பரத்தையிற் பிரிவினை அறிந்த தோழி அவன் வாயில் வேண்டி வந்தபொழுது அவனைத் தெருட்டும் நிகழ்ச்சிகளை அகப்பாடல்களில் காண்கின்றோம். தோழிக்குரிய இந்த உரிமையைத் தொல்காப்பியரும், பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்' என்ற விதியால் பெறவைப்பர். பிழைத்து வந்திருந்திருந்த கிழவன் என்பதற்குப் பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவன்’ என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். இதற்குப் பொருந்தும் ஒரு சில நிகழ்ச்சிகளைக் காட்டுவோம். - 93. குறுந் 115 - 94. கற்பியல்-9 (அடி 8-9) (இளம்)