பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 அகத்திணைக் கொள்கைகள் புலப்படுத்தியது காண்க. 'ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது. வானோர் அமிர்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவும் தொடுத்தற்கண்" தலைவன் கூறிய கூற்றினைத் தோழி கொண்டு கூறுவது உணர்தற்பாலது. தலைவியை அறிவுறுத்தல் : பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டுகின்றான். தோழி அவனை எதிரேற்று முகமன் வழங்குகின்றாள். ஆயின் அவள் இதனைத் தலைவிக்குணர்த்தியபொழுது அவள் உடன் படவில்லை. உடனே அவளுக்கு அறிவுறுத்துகின்றாள். தொல்காப்பியரும், அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்" (அழிந்தோள்-நெஞ்சழிந்தோள், வருந்துபவள்). என்று இதற்கு விதி செய்து காட்டுவர். நற்றிணையில் ஒரு நிகழ்ச்சி: மேற் கூறிய நிலையிலுள்ள தலைவியை நோக்கிக் கூறு கின்றாள். - . பழனப் பால் முயிறுமுசு குடம்பை கழனி நாரை உரைத்தலிற் செந்நெல் விரவுவெள் அரிசியின் தாஅம் ஊரன் பலர்பெறல் நசைஇம் இல்வா ரலனே; மாயோள், நலத்தை நம்பி விடலொல் லாளே, அன்னியும் பெரியன் அவனும் விழுமிய இருபெரு வேந்தர் பொருகளத் தொழித்த புன்னை விழுமம் போல என்னொடு கழியும் இவ்இருவரது வரவே." (பாகல்-பலா, குடம்பை-கூடு, கழனி-வயல், உரைத்தல்உறிஞ்சுதல்; பலர்ப்பெறல் நசைஇ-பரத்தையர் பலரை முயங்குதலை விரும்பி, நம்பி-விரும்பி; விடல்-துணியை' 93. கற்பியல் இளம்) 99. டிெ-9 (இளம்) 100. நற்-180. அன்னிக் குடியிலுள்ள அன்னி என்பவன் குறுக் கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் தேரழுந்துரி லுள்ள திதியன் என்பானது காவல் மரமாகிய புன்னையை வெட்டி வீழ்த்திய வரலாறு இதில் குறிக்கப் பெறுகின்றது (ஒப்பிடுக. அகம். 26, 145)