பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 381 ததைப் புலவர்கள் படைத்து மொழிந்தனர் என்று நினைத்தலும் சரியன்று. பரத்தையரைப்பற்றி இளம்பூரணர் கதுவது: 'பரத்தையராவார் யாவரெனின்,அவர் ஆடலும் பாடலும் வல்ல ராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டுந் தங்காதார்' என்பது. பண்டைக் காலத்தில் இங்ஙனம் ஒருவகையார் உளராய உண்மையினை மறைக்காது எடுத்துக் காட்டிய ஒரு சிறப்பினானே நாம் நம் பண்டைய நூல்களிடத்து, அவை கூறும் ஏனைய தலைவன் முதலியோர் பெருமைகளை உள்ளதை உள்ளபடியே கூறும் உண்மைக் கூற்றுகளாகத் தெளிந்து ஒரு தனி மதிப்புக் கொள்ளுகின்றோம். உரையாசிரியர்களும் இப்பரத்தையர் இவ்விக் காரணங்களால் படைத்து மொழியப்பெற்றவர், உண்மையில் இல்லாதவர் என்று எளிதில் கூறி ஒதுக்கி விடாமல் இவர்களையும் இவர்களுடன் ஒரோவழிக் கூட்டுறவு கொள்ளும் தலைவர்களையும். இயன்றவா லெல்லாம் போற்றி எழுதிச் செல்வாராதலையும் காண்கின்றோம். நெருப்போரன்ன நீதி நூலுடையோர் இத்தகையோரை இறப்பவும் வெறுத்துக் கூறுதல் அவர் கொண்ட கொள்கைக்குச் சாலுவதேயாகும். ஆயினும், நம் இலக்கண இலக்கிய நூலோரும் அவற்றின் உரையாசிரியர்களும் இவர்பால் இரக்கமுடையராகி இவர்கள் படிப்படியாக உயரும் நிலைகளையும் அமைத்துக் காட்டுகின்றனர். அகப்பொருள் விளக்க ஆசிரியர், யாரையும் நயவா இயல்பிற் சிறந்த சேரிப் பரத்தையர் மகளி ராகிக் காதலிற் புணர்வோர் காதற் பரத்தையர்.' என்பதாகக் காதற் பரத்தையரை அறிமுகப் படுத்துவர். அவர் ஒளுள்ளும் தலைமகன் வரைந்து கொள்வதற்கும் உரியர் என்பதனை. - அவருளும் வரைதற் குரியோர் உளரே.'" என்ற நூற்பாவால் புலப்படுத்துவர். இங்ஙனம் பண்டை ஆசிரியர் கள் பரத்தையரினின்றும் காதல் பரத்தையர் ஆவதற்கும் அதன் மேல் காமக் கிழத்தியாக, இற்கிழித்தியராக வரைந்து கொள்ளும் 104 கற்பியல்-10 இன் உரை. 105. நம்பிஅகப். 114 106. டிெ-115