பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ෆු அகத்திணைக் கொள்கைகள் முதுவேனிலும்; சிறுபொழுது நண்பகல்." இதற்குப் பின் பணியும் உரித்து என்றும் கூறுவர் தொல்காப்பியர். இந்தச் சூழ்நிலையை யுடைய காட்டில் தன் ஆருயிர்க் காதலன் பிரிந்து செல்வதை எண்ணித் தலைவி வருந்துவதாகப் பாடப்பெறும் பாடல்கள்பிரிவுத் துன்பத்தை மிகைப் படுத்திக் காட்டும்; அவலச்சுவை சிறப்பாக அமையும். இத்தகைய திணையை அமைத்துச் சிறந்த பாடல் களைப் பாடிப் பெரும்புகழ் பெற்ற பெருங்கடுங்கோ என்ற புலவர் 'பாலை பாடிய என்ற சிறப்புத் தொடரை அடையாகப் பெற்றுத் திகழ்கின்றார். இவர் பாடிய அகப்பாடல்கள் 67. இவற்றுள் களவில் வருவன 7; கற்பொழுக்கில் வருவன 60. பெரும்பாலும் பாலைப் புலவர்கள் உடன்போக்குத் துறையை மிகவும் விரும்பிப் பாடுவர். காடு சார்ந்த இடம் (முல்லை) : ஊருக்குச் சற்றுப் புறத்தே - இருப்பது காடும் காடு சார்ந்த இடமும். காடுகளில் கார் காலத்தில் மேகங்கள் கருக்கொண்டு ஒலித்துக் குன்றும் காடும் குளிரப் பெய்யும்; பெரிய கரிய மயில்கள் தோகையை விரித்துக் க்ொண்டு ஆடும். குருந்த மரத்திலுள்ள கிளிகள் மகளிர் போலக் கூவும். மழை பெய்த கானிலத்தில் வெப்பமும் அதிக மிராது; தட்பமும் மிக்கிருக்காது. நீரும் நிழலும் மலிந்து கிடக்கும். எம்மருங்கும் முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கி நிற்கும்; அவற்றில் வண்டுகள் மொய்த்துக் கொண்டு இன்னோசையை எழுப்பும். மான் தன்பிணையுடன் கூடிப் பள்ளங்களில் நிற்கும் நீரைப் பருகி இன்புற்றுத் திரியும். முல்லை நிலத்து மக்களாகிய ஆற்கள் காட்டிடித்தே கன்று காலிகளை மேய்த்துக் கொண்டு மர நிழலில் தங்கியிருந்து குழல்களில் இனிய பாக்களை இசைத்து ஊதுவர். மாலை நேரத்தில் கன்றும் கறவையும் கொண்டு ஆயர்கள் வீட்டிற்குத் திரும்புவர். அவற்றின் கழுத்தில் கட்டியுள்ள மணி அசைந்து அவ்வோசையால் மாலைப் பொழுதின் மாண்பினைக் காட்டி மகிழ்விக்கும். இந்த நிலத்திற்குரிய பெரும் பொழுது கார் காலம்; சிறு பொழுது மாலை நேரம். காரும் மாலையும் முல்லை" என்பது தொல்காப்பியம். இங்குப் பெரும்பாலும் தொடங்கி நள்ளிரவு முற்றும் மழை பெய்வது இயல்பு. 5. டிெ 11 (இளம்) 6. 12 ம் 7, 醬 - ಕ್ಲಿಕ್ಕಿ {ᏰafᏑ Ꮆy © இந்தச்