பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/401

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் உறவுடையோர் 383 என்று காமக்கிழத்தியரின் இலக்கணமும் வகுப்பாராயினர். அகப் பொருள் நூல்களில் காணும் பரத்தையர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவனைப்பற்றி நின்றவர் என்று கொள்ள இடம் உண்டு. இளம்பூரணரும் 'இற்கிழத்தி, காமக்கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியானா ல் வரையப்பட்டாராகப் பொருட் பெண்டிராகிய காதற் பரத்தையர் கூட்டம். ஒத்த காமமாகியவாறு என்னை எனின், அவரும் பொருளானாதல் அச்சத்தானாதல் அன்றி, அன்பினாவாதல் கூடு தலின், அதுவும் கந்தர்வத்தின்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுமாயின் இவன் (தலைவன்) மாட்டுத் தலைமையின்றாமென்பது உணர்ந்து கொள்க’ என்று காதற் பரத்தையரின் சிறப்பினைக் கூறியிருத்தல் காண்க அகத்திணை யொழுக்கத்தில் மருதத்திணைப் பகுதி ஒப்புயர்வற்ற குணங்களாற் சிறந்த தலைவன் பெருமைக்கு இழுக்காகவே தோன்றுகின்றது. இதனைத் தலைவியின் ஒழுக்கந் தவறாத கற்புத் திறனைப் புலப்படுத்தல் கருதியும் அவள் ஊடற்குக் காரணமாய் இன்பம் மிகுவித்தல் கருதியும் நாடக வழக்காகப் புலவர்கள் அமைத்த வழக்கு என்று கொள்ளலே ஏற்புடைத்தாகும். பரத்தைமை தமிழர் வாழ்க்கை நாகரிகத்தில் ஒரு பகுதி எனக் கோடல் தவறு. இதனால் தமிழகத்தில் பரத்தைமையே இல்லை என்று சாதித்தலும் அறிவுடைமையன்று. பரத்தைமை இல்லாத நாடே இல்லை என்பதுதான் உண்மை. இதன்ை நன்குணர்ந்த தொல்காப்பியர், A. இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும் அவையில் காலம் இன்மையான' - என்றும், காமப் பகுதி கடவுளும் வரையார்' என்றும் உண்மை இயல்பினை உணர்த்திய பெருமை உணர்ந்து போற்றற்குரியது. நச்சினார்க்கினியரும் தம் உரையில்' 'அவன் سمتمام 109. களவியல்-16 இன் உரை. 110. பொருளியல்-52 இளம்) 111. புறத்திணை-23 (இளம்) 112. களவியல்-20 (நச்)