பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 அகத்திணைக் கொள்கைகள் கண் பரத்தைமை இன்றேனும் காதல் மிகுதியால் அங்ங்ணம் கருதல் பெண் தன்மை' எனக் குறிப்பிட்டிருத்தலும் அறியத் தக்கது. தமிழர் வாழ்வில் பரத்தைமை ஒரு பகுதியாக இருந் திருப்பின் வள்ளுவப் .ெ ரு ந் த ைக யு ம் காமத்துப் பாவில் பரத்தைமை என்ற பகுதியை அமைத்திருந்திருப்பார். 'பரத்த நின் மார்பு' என்று தலைவனைக் குறிப்பிடும் பெறும் ஓரிடந் தவிர, பரத்தையர் எனப் பெண்பாலார் ஒரு தனி வகுப்பினராய் - இருந்ததாகக் கொள்ளவும், ஆண்மக்களும் பரத்தை உறவு கொள்ளை நாகரிகமாகக் கொண்டனர் என்று கருதவும் இடம் இல்லை. பரத்தமை அவ்வியல்பைக் கொண்ட தனிப்பட்ட மக்களைக் குறிப்பனவே அன்றி அவ்வியல்பு கொண்ட ஓரினத் தாரைக் குறிப்பதாகக் கொள்ளல் சிறிதும் பொருக்தாது. பண்டைய அக இலக்கியங்களில் பரத்தமைபற்றிக் காணப் பெறும் ஒரு சில கருத்துகளை ஈண்டுக் காண்போம். பரத்தையர் களை மலர்களாகவும் தலைவனை வண்டாகவும் உருவகித்துக் கூறும் மரபு உண்டு. - அவனே, 'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப மகன்"என் னாரே...' என்று விறலிமேல் வைத்துப் பரத்தை கூறுவதைக் காண்க. தலைவனைத் தான் சூழ்ச்சி செய்து மடக்கிக் கொள்கின்றதாகத் தலைவி தன்னைப் பழி தூற்றுவதாகக் கேள்வியுறுகின்றாள் பரத்தையொருத்தி. உடனே பாங்காயினாரை நோக்கிக் கூறு கின்றாள்: மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல் - வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்? அன்னதாகலும் அறியாள், எம்மொடு புலக்குமவன் புதல்வன் தர்யே.* 113. குறள்-1311 (புலவி நுணுக்கம்) 114. நற்-290 - 115. ஜங்குறு-90