பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் உறவுடையோர் 389 சென்ற செய்தியை அறிகின்றோம். இன்னொரு தலைவியின் சிறிய புதல்வன் ஒருமுறை தேரோடும் வீதியில் நடந்து செல் வதைக் காண்கின்றாள் தலைவியின் பரத்தை. அவனது எழில் நலம் அவனுடைய தந்தையின் எழில் நலத்தைப்போல் விளங்கி யதைக் கண்டு அச்சிறுவனின் அருகிற் சென்று, அங்கு ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்து அச்சிறுவனை நோக்கி என் உயிரனையாய்! வருக என அழைத்துத் தன் மார்பகத்தே அணைத்துக் கொண்டாள். இதனைக் கண்ணுற்ற தலைவி அப் பரத்தையை நோக்கி, 'குற்றமற்ற குறுமகளே! நீ ஏன் மயங்கு கின்றனை?நீயும் ஒரு முறையில் இச் சிறுவனுக்குத் தாயாகின்றாய்” என்று கூறினாள். தலைவியைக் கண்ட பரத்தை தன் களவினை ஒத்துக் கொள்வள்போல் தலை குனிந்து நின்றாள்.' ஈண்டுத் தலைவியின் பரந்த நோக்கமும் நாகரிகப்பண்பும் போற்றற்குரியன வாகும். சில பரத்தையர்கள் இங்ஙனம் தழுவுவதுடன் அணிகள் அணிந்தும் விடுக்கும் நிகழ்ச்சிகளையும் சங்கப் பாடல்களில் காண லாம். இன்னோர் ஆண்டின் முதியராயின் தலைவன் தலைவி யருக்குள் நிகழும் பிணக்குகளைத் தீர்த்து வைக்கவும் முன் வந்து, தலைவிக்கு நன்மதி கூறி, அவளைத் தலைமகனுடன் கூட்டி வைத்து மகிழும் நிகழ்ச்சிகளையும் ஆங்குக் காணலாம். இதனை, காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையில் தாய்போற் கழறித் தழிஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும்' என்னும் தொல்காப்பியக் கற்பியல் நூற்பாப் பகுதியால் உணரலாம். - காதற் பரத்தையரின் பொருட்பற்றில்லா உள்ளப் பெருமை யினையும் அவர் தலைவன்பால் உண்மை அன்புடையவர் என்ப தற்கும் சான்றுகள் உள்ளன. தலைவியொருத்தி சேரிப் பரத்தை யின்மீது இல்லாத பழியினை ஏற்றிக் கூறுகின்றாள். அதனைக் கேட்ட அப்பரத்தை தலைமகட்குப் பாங்காயினர் கேட்பக் கூறுகின்றாள்: வாளை மீனை உண்ண வேண்டும் என்ற விருப்பங் கொண்ட நாரை அம்மீன் தன்னை அறியாவகை பையப் பையக் செல்லும். அதுபோல, தலைவன் வேறு பரத்தையரிடம் செல்லாமல் என்னுடன் வருவதற்கு யான் பையப் பையச் செல் கின்றேன். அவன் யான் வசிக்கும் சேரிக்கு வரட்டும். 123. அகம்-16. 24. கற்பியல்-10