பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/408

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 அகத்திணைக் கொள்கைகள் அவ்வாறு அவன் வந்தால் அவனுடைய பெண்டிர் காணும்படி அவனுடைய தாரும் தானையும் (ஆடை) பற்றி ஆரியர் பிடி பானையால் களிற்றைப் பிடிப்பதுபோல் என் அழகினால் யான் அவனை என் வயமாக்குவேன். அவ்வாறு செய்யேனாயின், இறந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயாய் ஒம்பிய நானே (யாய்-தாய்; ஒம்பிய-பாதுகாத்த நலன்-அழகு) 魔燃岛 என்று வெகுண்டு கூறுவதனால் அறியலாம் இதனால் சேரிப் பரத்தைக்குத் தலைவன் மாட்டுள்ள அன்பு எத்தகையது என்பது தெற்றெனப் புலனாகின்றது. சிலப்பதிகாரத்து மாதவியின் குணங்களையும் அவள் கண்ணகி யின்பால் கொண்டிருந்த நன் மதிப்பினையும் நாம் நன்கு அறி வோம். இந்த வரலாற்று நூல்களில் பெயருடன் வரும் காதற் பரத்தையிடத்தும், அகப்பாடல்களில் சுட்டி ஒருவர் பெயர் கூறப் பெறாது வரும் காதற் பரத்தையரிடத்தும் உயர்ந்த குணங்களே காணப்பெறுதலை நாம் உணரலாகும். பரத்தையும் மனிதப் பிறவியே. அவள் ஒர் ஆடவனுடன் கூடி வாழ வேண்டும் என்பது இயல்பேயன்றோ? ஏதோ சூழ்நிலையின் காரணமாக, ஒருகால் ஆண்மக்களைவிடப் பெண்கள் பெருந்தொகையினராக இருப்ப தன் காரணமாக, பல பெண்டிர்கட்கு இங்ங்ணம் 'பரத்தை வாழ்க்கை நேரிடுகின்றது. ஆயினும்,பொருளுக்காகத் தம் உடலை விற்கின்றனர் என்ற கருத்து அகப்பாடல்களில் யாண்டும் காணப் பெறவில்லை. மாறாக, அவர்கள் ஆணுடன் சேர்ந்து வாழ விரும்புதலையே காண்கின்றோம். சுருங்கக்கூறின், இப்பரத்தையர் கூட்டுறவு மதிக்கண் மறுப் போல் கருதப்பெறுவதொன்று. அம்மறுவும் மதியினை விட்டக லாது அம்மதிக்கும் அதன் ஒளிக்கும் அவற்றாலாகும் உலக நன்மைக்கும் எத்தகைய இடையூறும் விளையாது அம்மதியினைச் சார்ந்து நிற்பதால் அம்மதியுடன் பலராலும் போற்றப்படுகின்றது. அங்ஙனமே இப்பரத்தையர்க்கூட்டுறவு தலைவற்கும் தலைவிக்கும் அவர்தம் வாழ்க்கை அறங்கட்கும் இடையூறு விளைக்காதிருத் தலின், அகநூலார் இதனையும் போற்றிக் கூறுவாராயினர் என்பது உணர்தற்பாலது. 125. அகம்-276