பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/411

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் 393 புன்கண் யானையொடு புலிவழங்(கு) அத்தம் நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே நெடுஞ்சுவர் நல்இல் மருண்ட இடும்பை யுறுவிநின் கடுஞ்சூல் மகளே." (புன்கண்-புல்லிய கண்கள்; புவிவழங்கு-புலிகள் திரிகின்ற: அத்தம்-பாலைக் கொடுநெறி; நல்இல்-நல்ல இல்லம்; மருண்ட-மயங்கிய இடும்பை-பெருந்துன்பம்; உறுவிநுகர்பவள்; கடுஞ்சூல்-முதற்குல்) இதில், 'நீ மருண்டு உன் வீட்டில் இற்செறித்த கொடுமை பொறாது, நின் நல்லில்லில் நின்னோடு உறைதலினும் யானையும் புலியும் வழங்கும் காட்டுவழியில் தன்னை நயந்தானோடு போதலே அறமாம் என்று துணிந்து போயினள்' என்று கூறுவர். அஃது அவட்கு அறமே ஆகும். ஆதலால் நீ வருந்தற்க என்ற குறிப் பெச்சமாகப் பெற வைத்த நயம் உணர்ந்து மகிழத் தக்கது. உடன் போக்கில் செல்லும் தலைவனையும் தலைவியையும் காணும் கண்டோர் கூறுவது. அறியாச் சிறுபருவத்தில் தலை மயிரைப் பற்றிக் கலாம் விளைத்துக் கொண்டிருந்தனர், செவிலித் தாயராலும் இதனைத் தடுக்க முடிவதில்லை. இவர்களைக் காணும் நிலை மகிழ்ச்சியைத் தருகின்றது' என்று கூறி, நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே." (நல்லை-நன்மையுடையாய்; மன்ற-நிச்சயமாக:பால்-ஊழ்: துணை பிணையல்-இரட்டை மாலை; மனம் மகிழ்-மணம் புரிந்து மகிழும்; காட்டியோய்-உண்டாக்கினாய்) என்று பால்வரைத் தெய்வத்தை வழுத்திச் செல்லுகின்றனர். ஐங்குறுநூற்றில் பாலைத் திணையில் உடன் போக்கின்கண் இடைச் சுரத்து உரைத்த பத்து" என்ற தலைப்பில் கண்டோர் கூற்றாகப் பல பாடல்கள் உள்ளன. பிரிந்து செல்லும் தலைவியின் உணர்ச்சி, தேடிச் செல்லும் செவிலித் தாயின் பல்வேறு உணர்ச்சி 5. டிெ-386 6. குறுந்-229 7. ஐங்குறு.-39ஆம் பத்து.