பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/413

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலைமக்களுடன் தொடர்புடையோர் - 395 பருவம் (திரும்பும் காலம்) யாதென்று தோழி இவரை வினவிய தாகக் குறுந்தொகையில் ஒர் அழகான பாடல் உள்ளது. ஆசில் தெருவில் நாய்இல் வியன்கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழு(து) ஒரில் பிச்சை ஆர மாந்தி அற்சிரம் வெய்ய வெப்பத் தண்ணிர் சேமச் செப்பிற் பெறிஇயரோ நீயே மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவது என்றி அக்கால் வருவர்னங் காத லோரே' |ஆசு-குற்றம்: நாய்இல்-நாய் இல்லாத வியன்கடை அகன்ற வாயில்; அமலை-உருண்டை; இழுது-நெய்; ஒர்இல் ஒரு வீட்டில்; ஆர மாந்தி-வயிறு நிரம்ப உண்டு; அற்சிரம்முன்பனிக் காலம் (அச்சிரம்); பெறி இயர்-பெறுவாயாக; மின் இடை-மின்னைப் போன்ற இடையையுடைய தலைவி: கடைப் பெயல்-இறுதி மழை, எக்கால்-எப் பொழுது என்றி-என்பாய்) தலைவன் வாடைக் காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அப்பருவம் எப்பொழுது வரும் என்று அறியும் பொருட்டுத் தோழி அறிவரை வினவுகின்றதாக அமைந்துள்ளது இப்பாடல். தலைவனைக் கழறி எல்லையின் கண்ணே நிறுத்துதல் அறிவர்க்குரியது என்பதற்கு எடுத்துக் காட்டாக இளம்பூரணர் ஒரு குறுந்தொகைப் பாடலைக் காட்டுவர். உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே, இஃதோ ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநிலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற்(று) என்னும்இவ் ஆரே." 14. 15. குறுந்-217. அறிவர் பெறும் உணவை ஒரில் பிச்சை' என்று சிறப்பித்ததனால் இதனை இயற்றிய புலவர் ஒரில் பிச்சையார் எனப் பெயர் பெற்றார். குறுந்-295 இது உ. வே. சா. அவர்களால் தோழி கூற்றாகக் கூறப்பெற்றுள்ளது.