பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் 397 புண்கிடந்த புள்மனுநின் நீத்தொழுகி வாழினும் பெண்கிடந்த தன்மை பிறிதரோ-பண்கிடந்து செய்யாத மாத்திரையே செங்கயற்போற் கண்ணினாள் நையாது தான்நானும் ஆறு." (புண்-போர்ப் புண், புள்மனு-நிமித்திகன் போன்ற மனுவின் அறநெறி; நின்-உன்னை; நீத்து-நீங்கப் பெற்று; ஒழுகி-தீய ஒழுக்கத்தை மேற்கொண்டு; பெண்-பெண்மையாகிய பேரரசுக் குணம்; கிடந்த தன்மை-பொருந்திக் கிடக்கும் போக்கு:பண்-இசைப் பாக்கள்:கிடந்து பொருந்தப்பெற்று: செய்யாத மாத்திரையே-பாணர் பாடத்தொடங்கும் முன்னரே : கயல்-மீனிணை; நையாது-வருந்தாமல், நாணும்-வெட்க முறும்; ஆறு-வகை.) இப்பாட்டில் அறிவர் தலைவனிடம் சென்று 'அன்பனே, நிமித்தி தன்போன்று மக்கட்கு எதிர்கால ஏற்பாடாகச் செய்திகளைச் கூறிச்சென்ற மனுவின் அறநெறி உன்னை விட்டு விலகியதனால் நீ தீயவொழுக்கத்தில் வாழினும், கயல்மீனினைப் போன்ற கண் களையுடைய தலைவி ஊடலை மேற்கொண்டு வருந்தாமல் அவளிடம் பெண்மைக் குணம் பொருந்திக் கிடக்கும் போக்கு யாண்டும் காணவொண்ணாத காட்சியாகும்' என்று கூறி அவனை அவளுடன் சேர்ந்து வாழுமாறு தெருட்டியதைக் காண்க. இதுவும் மேற்கூறிய பாடல்களில் தலைவியைக் கழறியுரைத்தமை யும் தொல்காப்பியரின், இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்.'" என்ற விதியினாற் கொள்ளப்பெறும் என்பது அறிதற்பாலது. (iii) பாணன் பாணன் அகத்திணை நாடகத்தில் வரும் சிறுமாந்தர்களுள் ஒருவன். பண் என்பது, இசை. இசையில் வல்லுநனாக இருப்பவுன் பாணன். யாழினை இயக்கி அதனைப் பக்க வாத்தியமுக்கக் 18. திணை. நூற்-149 19. கற்பியல்.14 (இளம்)