பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


oA அகத்திணைக் கொள்கைகள் நாடக வழக்காகக் கவிஞர்கள் பாடல்களை அமைப்பர். தலைவன் இரவில் யாதாவது ஒருவினையின் நிமித்தம் தங்கிக்காலம் தாழ்ந்து வரினும் தலைவி அவன் பரத்தை வீடு சென்றான் என்று படைத்து மொழிந்து ஊடுவதாகவும் கவிதைகள் ஆக்கப்பெறும். இப் பகுதிக்குப் பெரும் பொழுது எது என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனவே, உரையாசிரியர்கள் பெரும் பொழுது ஆறும் இதற்கு உரியவை எனக் கொண்டனர். வைகறை, விடியல் என்ற சிறுபொழுதுகள் இரண்டும் இதற்கு உரியவை. வைகறை விடியல் மருதம்" என்பது தொல்காப்பியம். மருதத்திணைபற்றிப் பாடுதலால் சிறப் புற்ற பெயருடையோர் இருவர். ஒருவர் மருதம் பாடிய இனங்கடுங் கோ; மற்றொருவர் மருதனிள நாகனார், பின்னவர் மருதக் கலியின் ஆசிரியர். ஐங்குறு நூற்றுப்புலவர்களுள் ஒருவராகிய ஒரம்போகி யார் என்பவர் 100 பாடல்களால் மருதத்திணை பாடியவர். பரத் தமைத் துறைகளை வகை வகையாகப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. மருதத் திணைப் புலவருக்கு உள்ளுறை என்னும் இலக்கியக் கருவி மிகவும் இன்றியமையாதது. - கடல் சார்ந்த இடம் (நெய்தல்): நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடமும். நெய்தல் நிலத்தில் பல கானற்சோலைகள் இருக்கும். புன்னை, தாழை, ஞாழல், நெய்தல், பனை முதலிய மரவகைகள் அங்குச் செறிந்து காணப்பெறும். நாரை, அன்றில், கொக்கு கடலிலுள்ள மீனைக் கொத்தி உண்ணும். கடல் அலை உயர்ந்து தாழ்தல், மிகுந்த துயரம் குறைந்தகாலை ஏற்படும் இரக்கத்தினை ஒத்திருத்தலால் அச்சூழ்நிலையைத் தலைவி கண்ணுறும்போது அவளிடம் இரக்க உணர்ச்சியைத் தோற்றுவிக் கும். இதற்குரிய சிறுபொழுது எற்பாடு ஆகையால், அந்நேரம் இவ்விரக்க உணர்ச்சியை மிகுதிப்படுத்திக் காட்டும். எற்பாடு, நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்’ என்பது தொல்காப்பியம். எற்பாடென்பது பகற்பொழுதின் பிற கூறு. தொல்காப்பியர் இதற்கும் பெரும் பொழுது குறிப்பிட வில்லை. ஆனால், உரையாசிரியர்கள் பெரும்பொழுது ஆறினை யும்இ தற்கு உரியனவாகக் கொண்டனர். 8. டிெ-9:(இளம் , ಘೀ,