பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமக்களுடன் தொடர்புடையோர் 403 (பாணரும்-வழிவழி வருகின்ற பாணரும்; குருசில்-தலைவன்: வெம் காதலி-விருப்பத்திற்கிடனான தலைவி, பூசல்கண்ணிரின் மிகுதி; அருளாதோய்-இரங்குகின்றிலை.) பாசறையிலிருக்கும் தலைவனை நெருங்கிப் பாணன் பகர்ந்ததாக உள்ளது இப்பாடல். 'நின்னுடைய மூதாதையர் பேரன்புடையராய்ப் புரவலராய் விளங்கினமையின் எம் மூதாதையரும் நின் குடிப் பாணராயிலிருந்து பெருமை பெற்று வந்தனர். இப்பொழுது நின்பால் வன்கண்மை தோன்றா நின்றது. நின் ஆருயிர்க் காதலியின் துயர நிலையை உணர்த்தியும் நீ வாளா இருக்கின்றனை. தம் ஆருயிர்க் காதலிமாட்டும் அன்பில்லாதவர் நம்மாட்டு என்னாவர் கொல்லோ? என்று நாங்கள் உன்னை ஐயுறுகின்றோம். ஆதலின் நின் குடிப் பாணராய் வாழ விரும்பு கின்றிலம்’ என்று கூறுகின்றான். 'வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையையுடையவராக இருக்கும் யாம் எளியரே யாயினும் "மிகப் பேரெவ்வம் உறினும் எனைத்தும், உணர்ச்சியுள்ளோர் உடைமை உள்ளேம்; நல்லறிவுடையோர் நல்குரவே உள்ளுதும்’ ’’ என்று மேலும் உணர்த்துகின்றான். இத்தகைய நிகழ்ச்சிகளால் பாணன் தலைமக்களால் கேண்மை கொள்ளக் கூடிய பெருந் தன்மையுடையன் என்பதனையும் அறிகின்றோம். (iv) பார்ப்பார் பார்ப்பார் என்பார், பார்ப்பன குலத்துப் பிறந்தவர்; தலைவனுக்கு அடிக்கடி அறவுரை கூறுபவர். பார்ப்பார் என்ற சொல் ‘கூர்ந்து நோக்குவர் என்ற பொருளைத் தருவதால், அருமறைகளை ஆய்ந்து பார்க்கும் மக்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க்(கு) உரிய." 30. கற்பியல்-6. (இளம்)